கவனத்திற்குரிய
முக்கிய செய்திகள்
11.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டது ஏன்? நீங்கள் நெருப்போடு விளையாடுகிறீர்கள் என நீதிபதிகள் கண்டனம். ஒன்றிய அரசுக்கு விளக்கம் அளிக்க தாக்கீது.
* மக்கள் தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு, கருநாடகா மாநில முதலமைச்சர் சித்தாராமையா தெலங்கானாவில் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வேலை வாய்ப்புகள், ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் சிறந்த கல்வி போன்ற மூன்று மடங்கு தேவை என்று கருதும் பீகாரின் ஜாதிவாரி கணக்கெடுப்பின் தாக்கங்களை மய்யமாகக் கொண்டு ஒரு இயக்கத்தைத் தொடங்க சி.பி.அய்.(எம்.எல்) அமைப்பு திட்டம்.
* வரலாறு மாற்றப்படுகிறது. இன்று உலகில் நடந்து கொண்டிருக்கும் கொடூரமான போரில் இந்தியா கைகோர்த்து நிற்கும் நாடு என்பதை நினைத்து வெட்கப்படு கிறேன் என்கிறார் மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப்.
தி டெலிகிராப்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத் தில் பிரதமர் மோடியை குறிவைத்து ராகுல் காந்தி, சமூக நீதி இல்லாமல் இணக்கமான சமுதாயம் சாத்தியமில்லை என ம.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment