ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: சபரிமலை சீசனில் அதிகம் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி பல்வேறு தடை போட்டார்கள் (Check drug trade in Sabarimala: Panel 'டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட்' OCTOBER 30, 2001) தற்போது மீண்டும் விமானத்தில் இருமுடியைக் கொண்டுசெல்ல இருந்த தடையை விலக்கி உள்ளார்கள். கடத்தல்காரர்கள் திருந்திவிட்டார்களா? 

- த.ஆறுமுகம், வேலூர்

பதில் 1: மில்லியன் டாலர் கேள்வி இது!

சிறைக்கஞ்சா வீரர்கள் அதில் கலந்திருக் கிறார்களா? கடத்துகிறார்களா என்று ஆராயும் பொறுப்பு காவல்துறைக்கு உண்டு!

---

கேள்வி 2: பீகார் அரசின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக யாரும் நீதிமன்றம் செல்லவில்லையே?

- மா.கோவிந்தசாமி, திருத்தணி

பதில் 2: பொறுத்திருந்து பார்ப்போம்; எதிர் வழக்கு என்பது முக்கியமல்ல. என்றாலும் நிதிஷ்குமார், தேஜஸ்வி அரசு அதில் வெல்லும்.

தமிழ்நாட்டைப் பார்த்து 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புக்கு முயற்சி செய்கின்றனர் என்பது நமக்கு, முக்கியச் செய்தி அல்லவா?

---

கேள்வி 3: ஒரு மாத முடிவில் இஸ்ரேல் - காசா போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது, ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவிற்கு வரவில்லையே - ஏன்?

- தி.பார்த்தசாரதி, திருச்சி

பதில் 3: இதுகூட இஸ்ரேல் பிணைக் கைதிகளால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத நற்பலன். அப்படி ஏதும் அங்கே இல்லையோ?

---

கேள்வி 4: போலி விளம்பரம் செய்தால், ரூ.ஒரு கோடி அபராதம் விதிப்போம் என்று கருப்புப் பணச் சாமியார் ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதே?

- சா.கந்தசாமி, மதுரை 

பதில் 4: எச்சரிக்கை எதற்கு? அபராதத்தை நேரடியாக விதித்தாலும் அவர் கவலைப்பட மாட்டார்; கட்டி விடுவார். பல கோடிகள் சம்பாதித்தவருக்கு இது ஒரு துரும்பு மாதிரிதானே!

---

கேள்வி 5: பிசிசிஅய் நிறுவனம் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைப் பார்வையிட கபில் தேவ் மற்றும் தோனி போன்ற உலகக் கோப்பையை வென்ற வீரர்களை அழைக்காமல் ஜக்கி வாசுதேவ் போன்றோர்களை அழைத்தது ஏனோ?

- வே.சாக்கியமுனி, தாம்பரம்

பதில் 5: மோடி அரசோ பா.ஜ.க. காவிகளின் அரசு, அதில் வெற்றிக் கோப்பையை வென்றவர்களுக்கு ஏது இடம்; அவர்கள் காவி உடை அணியவில்லையே! விளையாடி தோற்றவர்கள் அனைவரும் காவி சீருடை அணிந்து விளையாடித் தோற்றவர்கள் என்றாலும்கூட!

---

கேள்வி 6: சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதத்தை சேர்க்க பரிந்துரை செய்துள்ளார்களே?

- ம.வேல்முருகன், விருதுநகர்

பதில் 6: "முழுக்க நனைந்த பிறகு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்?" என்றபடி, பகிரங்கமாய் அரசியல் சட்ட துஷ்பிரயோகத்திற்கு இனி ஏன் தயக்கம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு!

---

கேள்வி 7: திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களை வைத்து நாயன்மார் சிலையை சுமந்துசென்று ஊர்வலம், கோவையில் மாட்டிறைச்சி சாப்பிட்டாயா என்று கேட்டு இஸ்லாமிய மாணவியை அடித்து அவமானப்படுத்திய ஆசிரியர் - பள்ளிக் கல்வித் துறையில்... இந்த ஹிந்துத்துவ போக்கு எங்கு போய் முடியும்?

- க.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம்

பதில் 7: 2024 பொதுத்தேர்தல் முடிவுகளில் போய் முடிவது உறுதி!

---

கேள்வி 8: கீழடி பற்றிய அமர்நாத் இராம கிருஷ்ணனின் ஆய்வறிக்கையை எப்போதுதான் வெளியிடுவார்கள்?

- சா.பரந்தாமன், வியாசர்பாடி

பதில் 8: யாருக்கும் பாருக்கும் தெரியாத பரம ரகசியம் போலும் அது!

---

கேள்வி 9: அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் வரும் போது எல்லாம் கொலை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் ராம்ரகீமிற்கு  பிணை வழங்கி வெளியே அனுப்புகிறார்களே?

- வ.பச்சைமுத்து, திருவள்ளூர் 

பதில் 9: அவர் மூலமாவது ஓட்டு வேட்டையாடி ஓட்டுப் பொறுக்க முடியுமா என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடும்!

---

கேள்வி 10: அறநிலையத்துறை, ஆவின் ஆகிய இரண்டைப் பற்றியும் பா.ஜ.க. மற்றும் அதற்கு ஆதரவான சில கட்சிகளால் அதிகம் வதந்தி பரப்பப்பட்டு வருகிறதே?

- அ.சாவித்திரி, வேளச்சேரி

பதில் 10: வதந்தி பரவினாலும் வதந்தியின் சாயம் விரைவில் வெளுத்துவிடும்.

---

கேள்வி 11: அருகில் உள்ள ராஜஸ்தானில் காங்கிரஸ் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில்லை என்று கூறும் மோடி இதையே அடுத்த மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் கூறுவதில்லையே, ஏன்?

- ம.கவிவேந்தன், மயிலை

பதில் 11: "என் வீட்டில் நடந்தால் அது கல்யாணம். எதிர்வீட்டில் நடந்தால் அது எனக்கு இழவு" என்ற தத்துவம்!


No comments:

Post a Comment