இதன் அடுத்தபடியாக பாஜகவின் மாநிலச் செய லாளர் பதவியில் உள்ள ரஞ்சனா என்பவர் காமிரா சகிதம் சாலை யில் சென்று ஒரு பேருந்தை நிறுத்தக் கூறி அந்த ஓட்டுநரை மிகவும் அநாகரிகமாக பேசினார். மேலும் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அறைந்துள்ளார்,
சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் மாண வர்கள் பயணித்தனர். அப்போது காமிரா மேன்களோடு தனது வாகனத்தில் வந்த பாஜக மாநிலச்செயலாளர் ரஞ்சனா பேருந்தை ஓவர் டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள் ளார். மாணவர்கள் படி யில் பயணம் செய்தார்கள் என்று கண்டித்த அவர், மாணவர்களை இறக்கி விட்டதோடு மட்டுமல் லாது, அவர்களைத் தாக் கியும் உள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத் துநரை ஆபாசவார்த்தை கள் பேசி சண்டை இழுத் துள்ளார். இந்தக் காட்சி கள் அடங்கிய காட்சிப் பதிவு சமூக வலைதளங் களில் வைரலானது.
இந்நிலையில் பாஜக செயலாளர் ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட் டுநர் சரவணன் புகார் அளித்தார். இந்தப் புகா ரின் அடிப்படையில் நேற்று (4.11.2023) காலை மாங்காடு காவலர் கள் ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். மாணவர்க ளைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட அய்ந்து பிரிவு களின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
கைது செய்யவந்த காவல்துறையினருட னும் பாஜக செயலாளர் ரஞ்சனா வாக்குவாதம் செய்தார். கைது ஆணை இருக்கிறதா? என்ன காரணத்துக்காக கைது செய்கிறீர்கள்? என்றெல் லாம் வினவினார். அந்தக் காட்சிகளும் இணையத் தில் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ரஞ்சனா ஒரு சில தொலைக் காட்சி தொடரில் துணை நடிகையாகவும் இருக் கிறார் என்பதும் குறிப் பிடத்தக்கது. பின்னர் இவர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment