சென்னை அய்.அய்.டி.யில் மாணவர் தற்கொலை அய்.அய்.டி. பேராசிரியர் இடைநீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

சென்னை அய்.அய்.டி.யில் மாணவர் தற்கொலை அய்.அய்.டி. பேராசிரியர் இடைநீக்கம்

சென்னை, நவ. 29- மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின்.இவர் சென்னை அய்.அய்.டி.யில் பி.எச்.டி. படித்து வந்தார். இவர் மார்ச் 31ஆ-ம் தேதி வேளச்சேரியில் தங்கியிருந்த வீட் டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலைக்கும், அவ ரது வழிகாட்டி பேராசிரியருக்கும் நேரடி தொடர் இருப்பதாகத் தெரிவித்து மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற அய்.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை அய்அய்டி அமைத்தது. அதில் ஒய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி டி.சபிதா, அய்அய்டி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இந்தக் குழு மாணவர்கள், பேராசிரியர்களிடம் இருந்து பல் வேறு கருத்துகளை கேட்டுப் பெற்றது. அதன் அடிப்படையில் 700 பக்கங்கள் கொண்ட விசா ரணை அறிக்கையை அந்தக் குழு வினர் அய்அய்டி இயக்குநர் வீ.காம கோடியிடம் ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்தனர். அதன் பரிந்துரையின்படி பேராசிரியர் ஆசிஷ் குமார் சென் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அய்.அய்.டி. பேரா சிரியர்கள் சிலர் கூறும்போது, ``விசாரணைக் குழுவின் அறிக் கையில் பேராசிரியர் ஆசிஷ் குமார் சென் மீதான புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப் பட்டது. மேலும், 34 பரிந்துரை களும் தரப்பட்டிருந்தன. அதில் முக்கியமாகப் பேராசிரியர் சென் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி கடந்த வாரம் பேராசிரியர் ஆசிஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதவிர பேராசிரியர்கள், மாண வர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகாதவாறு வைப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண் டும் என்பன உள்ளிட்ட அம்சங்க ளும் அறிக்கையில் இடம் பெற்றுள் ளன'' என்றனர்.

அதேபோல், சென்னை அய்.அய்.டி.யில் மாணவர்களிடம் நடத் தப்பட்ட ஆய்வில் 2% பேர் மன அழுத்தத்தில் இருப்பதும் கண்டறி யப்பட்டது. இதையடுத்து மாண வர்களின் குறை தீர்ப்பாளராக மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் திலகவதி நியமிக்கப்பட் டார்.

No comments:

Post a Comment