நெல்லை, நவ.26 ‘ஆளுநர் தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை மட்டுமல்ல, பட்டங்களையும் தாமதிப்ப தால் முதலமைச்சர் வேந்தராக வேண்டும்’ என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்து உள்ளார்.
பாளையங்கோட்டை தூய சவேரி யார் கல்வியியல் கல்லூரியில் பட்ட மளிப்பு விழா நடந்தது. விழாவில் பி.எட். பட்டம் பெற்ற 200 பேருக்கும், எம்.எட். பட்டம் பெற்ற 10 பேருக்கும் என 210 பேருக்கு பட்டங்களை வழங்கி பேர வைத் தலைவர் மு. அப்பாவு பேசிய தாவது:
இந்த நிகழ்ச்சியில் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து மாணவிகள் பட்டம் பெறு கின்றனர். ஆளுநர் பட்டம் வழங்கி னால்தான் உங்களுக்கு அடுத்தடுத்து பட்டம் வழங்க முடியும். அதனால் தான்
3 ஆண்டுகள் பட்டம் கிடைக்க காலதாமதமாகி உள்ளது. ஆளுநர் தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோ தாக்களை மட்டுமல்ல, பட்டங்கள் வழங்குவதையும் காலதாமதம் செய் கின்றார். அதனால்தான் பல்கலைக் கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சர் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட் டிற்கு உகந்தது அல்ல. அதனால் தான் அதை எதிர்க்கிறோம். இவ்வாறு பேர வைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்.
No comments:
Post a Comment