01. டைனோசர்களின் அழிவிற்கு காரணம் பூமியில் மோதிய விண்கற்கள் தான் என்று கருதப்படுகிறது. ஆனால், தற்போது விண்கல் மோதியதால் எழுந்த தூசுப்படலம் பூமியின் வளி மண்டலத்தில் நிரம்பி, சூரிய ஒளியையும் வெப்பத்தையும் தடுத்து பூமியைக் குளிர்வித்ததே காரணமாக இருக்கலாம் என்று புது கோட்பாட்டை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
02. ஆஸ்திரேலியாவின் ப்ளிண்டர்ஸ்ய பல்கலை விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் 1959ஆம் ஆண்டிலிருந்து மனநலப் பிரச்சினைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ‘ட்ரைப்ளூவோபெராசின்’ என்ற மருந்து மூளைப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
03. ஸ்பானிய விஞ்ஞானிகள் உயிரியல் வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இங்கு மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளைத் திசுக்கள் பாதுகாக்கப்படும். இவற்றை மருத்துவச் சோதனைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
04. இந்திய விண்வெளி ஆய்வு மய்யமான இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசாவும் இணைந்து நிசார் எனும் செயற்கைக்கோளை 2024ஆம் ஆண்டு அனுப்ப உள்ளன. பூமியின் வளிமண்டலம், நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வுசெய்வது இதன் முக்கிய நோக்கம்.
05. பூமியிலிருந்து 6 ஒளியாண்டுகள் தொலைவில் இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோத உள்ளதாகவும், அப்போது ‘கில்நோவா’ எனும் ஒளிவெள்ளம் ஏற்படப் போவதாகவும் சிகாகோவின் இல்லினாய்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment