போபால், நவ. 1- ம.பி. உள் ளிட்ட 5 மாநிலங்கள் இம்மாதம் தேர்தலை சந்திக் கின்றன. மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட ம.பி. சட்டப் பேரவைக்கு வரும் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள் ளது. ம.பி. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 30.10.2023 அன்று கடைசி நாளாகும்.
கடைசி நாளில் மாநிலம் முழுவதும் 2,489 வேட்பாளர்கள் 2,811 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் தொடங்கி கடைசி நாள் வரை 230 தொகுதிகளிலும் மொத்தம் 3,832 வேட் பாளர்கள் 4,359 வேட்பு மனுக்களை தாக்கல் செய் துள்ளனர். வேட்பு மனுக் கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை (நவ. 2) கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment