மும்பை, நவ.25 புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கு வயது தடை அல்ல என்பதை நிருபித்துள்ளார் 97 வயது மூதாட்டி ஒருவர். சமூக ஊட கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு காட்சிப் பதிவில் இன்றைய 'ஹீரோ' என்ற தலைப்பில் மூதாட்டி ஒருவர் பாரா மோட் டரிங் எனப்படும் வான்சாகசத் தில் பங்கேற்ப தற்காக அதனை கற்றுக்கொண்டு பறந்த காட் சிப் பதிவில் காட்சிகள் உள்ளது.
மேலும் ஆனந்த் மகிந்திராவின் பதிவில், பறக்க இது ஒரு போதும் தாமதமாகாது. அவர்தான் எனது இன்றைய 'ஹீரோ' என அந்த மூதாட்டியை பாராட்டியுள்ளார். 55 வினாடிகள் கொண்ட இந்த காட்சிப் பதிவை முதலில் இன்ஸ்டாகிராமில் மகா ராஷ்டிரத்தை தளமாக கொண்ட பிளையிங் ரைனோ பாராமோட்டரிங் பகிர்ந்துள்ளது. அதில் 97 வயது மூதாட்டி ஒருவர் பாராமோட்டரிங் சாகசத்தில் பங்கேற்பதற்காக பயிற்சி யாளர் மூலம் அதனை கற்றுக் கொள்ளும் காட்சிகள் உள்ளது.
பின்னர் அந்த மூதாட்டி பாரா மோட்டரிங் மூலம் வானில் பறந்த காட்சிகள் பயனர்களை ஆச்சரியப் பட செய்துள்ளது. இந்த காட்சிப் பதிவில் 6.4 லட்சம் பார்வைகளையும், 17 ஆயிரம் விருப்பங்களையும் குவித்துள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் மூதாட்டியை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வயது என்பது வெறும் எண், ஒரு வயதான பெண்மணி எந்த பயமும் இன்றி 'பாரா கிளேடிங்' செய்யும் இந்த காட்சிப் பதிவில்
அது நிரூபிக்கிறது. சாகசத்திற்கு எல் லையே இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
மூதாட்டியின் தைரியத்திலும், ஆர்வத்திலும் நாம் அனைவரும் உத்வேகம் பெறுவோம் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment