மறைந்த பூண்டி கே.கலைச்செல்வம் நினைவு பெரியார் படிப்பகம் - கி.வீரமணி நூலகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடத் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

மறைந்த பூண்டி கே.கலைச்செல்வம் நினைவு பெரியார் படிப்பகம் - கி.வீரமணி நூலகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடத் தீர்மானம்

கிடாரம் கொண்டான், நவ.30- மறைந்த பூண்டி கே.கலைச் செல்வன் நினைவு..... பெரியார் படிப்பகம் கி.வீரமணி நூலகம் கிடாரம் கொண்டான் பெரியார் படிப்பகத்தில் 28.11.2023 மாலை 6 மணிக்கு பெரியார் பெருந் தொண் டர் ச.ஆத்மநாதன் தலைமையில் பெரியார் படிப்பக வளர்ச்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், கிடாரங்கொண் டான் பெரியார் படிப்பகத்தில் பழுதடைந்த பகுதிகளை பழுது நீக்கம் செய்வதென்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவினை டிசம்பர் 26 அன்று திருவாரூர் வர்த்தக சங்க அரங்கில் பல நலத் திட்ட உதவிகளுடன் அனைத்து கட்சி பொறுப்பாளர்களையும் அழைத்து படிப்பகத்தின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது எனவும், டிசம்பர் 30 பெரியார் பெருந்தொண்டர் அ.அறிவுக் கண்ணு அவர்களின்  நினைவு நாள் கூட்டம் கொள்கை விழாவாக தெருமுனை கூட்டம் கிடாரம் கொண்டானில் படிப்பகத்தின் சார்பில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மறைந்த பூண்டி கே.கலைச் செல்வம் நினைவு பெரியார் படிப்பகம் கி வீரமணி நூலகத்திற்கு கீழ்கண்ட பொறுப்பாளர்கள் நிய மிக்கப்பட்டன..

புரவலர்  பூண்டி கே.கலை வாணன் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், தி.மு.க. 

வீ.மோகன், மாவட்டத் தலைவர், தி. க.

வீர கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர், தி.க.

கி.அருண் காந்தி, மாவட்டத் துணைத் தலைவர், தி.க.

ச.ஆத்மநாதன், பெரியார் பெருந்தொண்டர்.

இயக்குனர் 

இரா.சிவக்குமார்

தலைவர் 

அ.செல்வந்திரன்

துணைத் தலைவர் 

த.சந்திரசேகரன் பிலிப்ஸ் ராஜா

செயலாளர் 

கோ .செந்தமிழ் செல்வி

துணைச் செயலாளர்

ப. ஆறுமுகம் 

அ. செல்வகுமார்

அமைப்பாளர் 

அ. செல்வம்

பொருளாளர் அ.செல்வராஜ்

செயற்குழு உறுப்பினர்கள்

என் .சித்தார்த்தன் 

த.முருகேசன்

ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment