சுற்றுலாத் துறை மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை வாலாஜா சாலையி லுள்ள சுற்றுலா வளாகக் கூட்ட ரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியது:
தமிழ்நாட்டில் கரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு 2021-இல் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்று லாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-இல் 4,07,139 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 2023-இல் ஜனவரி-செப்டம்பர் வரை 9 மாதங்களில் 8,64,133 என வெளிநாட்டு சுற்ற லாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேபோல 2021-இல் 11,53,36,719 ஆக இருந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 மாதங் களில் 21,37,71,093 என உயர்ந் துள்ளது.
அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை ரூ.11.98 கோடி மதிப்பில் லேசர் தொழில்நுட்பத்தில் ஒளியூட்டும் பணிகளும், ரூ.23.60 கோடி மதிப் பில் பூம்புகார் கலைக்கூடம் புனர மைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
ரூ.14.07 கோடி மதிப்பில் பிச்சா வரம் சுற்றுலாத் தலம் மேம்படுத் தும் பணிகளும், ரூ.17.57 கோடி மதிப்பில் தருமபுரி - ஒகேனக்கல் சுற்றுலாத் தலம், ரூ.5 கோடி மதிப் பில் முட்டுக்காடு பகுதியில் இரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உண வகக் கப்பல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை குறித்த காலத் திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் அவர். இக்கூட் டத்தில், சுற்றுலா, பண்பாடு மற் றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் க.மணிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழ கத் தலைவர் காகர்லா உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment