வழிக்கு வந்தது ஒன்றிய அரசு! தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

வழிக்கு வந்தது ஒன்றிய அரசு! தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப அனுமதி

சென்னை, நவ. 1-  தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதி கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, அகில இந்திய கலந்தாய்வு இன்று (அக்.31) தொடங்கி வரும் நவம்பர் 7ஆ-ம் தேதி வரையிலும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆ-ம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆ-ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பு: 

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.மான்சுக் மாண் டாவியாவுக்கு எழுதிய நேர்முக கடி தத்தின் அடிப்படையில் 86 எம்.பி. பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படும். தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 16 மருத்துவ இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 மருத்துவ இடங்களும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மருத்துவ இடங்களும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் 17 மருத் துவ இடங்களும் காலியாக உள் ளன. காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு 31.10.2023 முதல் 07.11.2023 வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும். மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 07.11.2023 முதல் 15.11.2023 வரை நடைபெறும். எனவே, மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணைய தளத்தை தொடர்ந்து பார்வையிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment