சென்னை, நவ. 18- மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு களை கொடையாக வழங்கிய விழுப்புரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த அராஜகன் கலியமூர்த்தி (வயது 26) என்ற இளைஞரின் உடலுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் அரசு மரியாதை செலுத்தினார்.
பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடை செய்பவர்களின் உடலுக்கு, அரசு மரியாதை செய்யப்படும் என, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்பின், 55 நாட்களில், 26ஆவதாக, உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு, அரசு மரியாதை செலுத்தப் பட்டுள்ளது.
மேலும், இணையதளத்தில் மட்டும், 2,890 பேர் உறுப்பு கொடை அளிக்க முன்பதிவு செய்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை, 8,234 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அதேநேரம், சிறுநீரகத்துக்கு 6,229 பேர்; கல்லீரல் 465; இதயம் 80; நுரையீரல் 68; இதயம் மற்றும் நுரையீரல் 25; கை 26; சிறுகுடல் 2; சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 42; சிறுநீரகம் மற்றும் கணையம் 41; இதயம் மற்றும் கல்லீரல் 1; கணையம், சிறுகுடல், வயிறு ஒருவர் என, 7,007 பேர் பல்வேறு விதமான உடல் உறுப்புகள் வேண்டி காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment