மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது

வாசிங்டன், நவ. 12 - உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மய்யம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2000ஆவது ஆண்டில் உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த நிலையில், 23 ஆண்டு களில் 200 கோடி அதிகரித்துள்ளது. 

கடந்த 1960 ஆவது ஆண்டில் இருந்து 2000ஆண்டு வரையி லான காலகட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற் போது அவை குறைந்து உள்ளது.

பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவதே இதற்கு காரணம் என கணக்கெடுப்பு மய்யம் கூறியுள்ளது. உலகி லேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்க ளின் பட்டியலில் ஜப் பான் நாட்டின் டோக் கியோ முதல் இடம் பிடித் துள்ளது. டோக்கியோ வின் மக்கள் தொகை 3,71,94,105 ஆக உள்ளது. 

பட்டியலில் டில்லி 3,29,41,309 மக்கள் தொகை யுடன் 2ஆம் இடத்திலும் சீனாவின் ஷாங்காய் 2,92,10,808 3ஆம் இடத்தி லும் உள்ளது. 

2,12,96,517 பேருடன் மும்பை 9ஆவது இடத்தி லும் 1,53,32,793 பேருடன் கொல்கத்தா 17ஆவது இடத்திலும் 1,36,07,800 பெங்களூரு 23ஆவது இடத்திலும் 1,17,76,147 சென்னை 26ஆவது இடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment