புதுடில்லி, நவ.11- கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட் டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 7 ஆண்டு கள் ஆகும்நிலையில் ஒன் றிய அரசின் இந்த நட வடிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமை யாக விமர்சித்துள்ளார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பணமதிப் பிழப்பு நடவடிக்கை மற் றும் மோசமாக வடிவ மைக்கப்பட்ட ஜிஎஸ்டி யும் நாட்டின் வேலை வாய்ப்பை உருவாக்கும் சிறு மணீநீற்றும் நடுத்தர வணிகங்களை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது.
45 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 2013 ஆம் ஆண்டு தொடங்கிய பொருளாதார மீட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ணீது விட்டது. 7 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரத மர் மோடி பணமதிப் பிழப்பு நடவடிக்கையை திணித்தார். இது இந்திய பொருளாதாரத்தின் முதுகை உடைத்த ஒரு முடிவு.
இதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திட்டமிடப் படாத ஊரடங்கு நடவ டிக்கை மூலமாக மீண்டும் ஒரு கேலிக்கூத்து நிகழ்ந் தது. இதன் மூலமாக லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்த மாபெரும் பேரழிவை ஏற் படுத்திய பிரதமர் மோடியை இந் தியா ஒருபோதும் மன் னிக்காது” என்று குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment