சென்னை, நவ. 21- தமிழ்நாட் டில், 9 லட்சத்து 21 ஆயிரம் விவசாயி களுக்கு நடப் பாண்டில் 7 ஆயிரத்து 600 கோடி பயிர்க்கடன் வழங் கப்பட்டுள்ளதாக கூட்டுற வுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 9 லட்சத்து 21ஆயிரத்து 332 விவசாயிகளுக்கு 7ஆயிரத்து 600 கோடி அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ள தாகவும், கடந்த ஆண்டில் இதே காலத்தில் வழங்கிய தைக் காட்டிலும் கூடுதலாக 848 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதா கவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பயிர்க் கடன் பெற்றுள்ள விவசாயிகள் உரிய காலக் கெடுவிற்குள் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், 7 சதவீதம் வட்டி ஊக்கத் தொகையை முழுவதுமாக தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகவும், வேளாண் பெருமக்களுக்கு அனைத்து வகையான சேவைகளை அளித்திடும் வகையில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மய்யங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் பவர்டில்லர், டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் வாங்குவதற்கும், சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 18 திட்டங்களுக்கு சுமார் 460 கோடியே 64 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
-இவ்வாறு கூட்டுறவுத் துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment