இதில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.4 கோடி டன் உணவு தானியம் வீணடிக் கப்படுவதாக தெரியவந் துள்ளது. இது, 2022-_2023-ஆம் ஆண்டில் இந் தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 22 சதவிகிதம் என்று கூறப் படுகிறது.
தெற்காசியப் பிராந்தி யத்தில் உணவு இழப்பை தடுப்பது தொடர்பாக நடைபெற்ற பன்னாட் டுக் கருத்தரங்கில் இந்த தகவல் பகிர்ந்து கொள் ளப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஜெர்மனியின் துநென் இன்ஸ்டிடியூட் இணைந்து மூன்று நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்த கருத்தரங்கின் தொடக்க நாளன்று அய் சிஏஆர் தலைவர் ஹிமான்ஷு பதக் கூறு கையில், “உணவு வீணாவ தற்கு, சேமிப்பு வசதிகள் இல்லாததே முக்கிய காரணம். புள்ளி விவரங் களின் மூலம் அறிந்து கொண்டதன் அடிப் படையில் உணவு உற் பத்தியை அதிகரிப்பதில் காட்டும் கவனத்தை விட அதனைப் பாதுகாப்பதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என் பது உறுதியாகியுள்ளது. ஏனெனில், உணவு வீணா வது பொருளாதார இழப்பை ஏற்படுத்துவ தோடு மட்டுமல்லாமல், தனிநபர் ஆரோக்கியம், கால நிலையையும் பாதிப் பதாக அமைகின்றன’’ என்றார்.
அறுவடைக்குப் பிந்தைய இழப்பு
அறுவடைக்குப் பிந்தைய இழப்பு மற்றும் உணவுக் கழிவுகள் என்பது நாடுகளின் புவியியல் தன் மையின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இது பெரும்பாலும், பயிர்கள், பொருட்கள், சேமிப்புக் காலம், கால நிலை, தொழில்நுட்ப தலையீடு கள், மனிதர்களின் பழக்க வழக்கம் மற்றும் மரபு ஆகியவற்றை சார்ந்தவை யாக உள்ளன.
அய்க்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2021-இன்படி, உலகள வில் உணவுகள் கழிவு களாக வீணடிக்கப்படு வதற்கு குடும்பங்கள், உணவு சேவைகள், சில் லறை விற்பனை நிலை யங்கள் காரணங்களாக உள்ளன.
உலகளவில் ஒவ் வொரு தனிநபரும் ஆண் டொன்றுக்கு 121 கிலோ உணவை நுகர்வு நிலை யில் வீணடிக்கின்றனர். இதில், 74 கிலோ உண வுகள் வீடுகளில் மட்டுமே வீணடிக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் தனி நபர் ஒருவர் ஆண் டுக்கு 50 கிலோ உணவை வீணடிக்கிறார். இருப்பி னும், இது தெற்காசியாவி லேயே மிகவும் குறைந்த பட்ச அளவு என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர 28 சதவிகித விவசாய நிலங்கள் ஒரு போதும் சாப்பிட முடி யாத அல்லது வீணடிக்க முடியாத உணவுகளை உற்பத்தி செய்ய பயன் படுத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment