இணையதள மோசடி 6 மாதத்தில் ரூ.21 கோடி பணம் பார்த்த தெருவோர காய்கறி வியாபாரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

இணையதள மோசடி 6 மாதத்தில் ரூ.21 கோடி பணம் பார்த்த தெருவோர காய்கறி வியாபாரி

குருகிராம், நவ. 5- ரிஷப் சர்மா (வயது 27) அரி யானா மாநிலம் குருகிரா மைச் சேர்ந்தவர். சாலை ஓரத்தில் காய்கறிகள் விற்றுவந்தவர், கரோனா காலகட்டத்தில் கடும் இழப்பைச் சந்தித்தார். குடும்பத்திலும் சிலரை கரோனாவில் பறி கொடுத்தார். 

இந்த நிலையில் பொருளாதார இழப்பில் இருந்து மீள சைபர் மோசடிகளில் ஈடுபட ஆரம்பித்தவர், ஆறே மாதங்களில் ரூ.21 கோடி ஈட்டினார். பல்வேறு மாநிலங்களில் சைபர் மோசடிகளை மேற்கொண்டு வந்த அவரை, கடந்த மாதம் 28-ஆம் தேதி உத் தராகண்ட் மாநிலத்தில் சைபர் மோசடி பிரிவு காவல் துறை கைது செய்தது. 10 மாநிலங்களில் பதிவான 35 வழக்குகளில் ரிஷப் சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா, சிங்கப்பூர், ஹாங் காங் உட்பட வெளிநாடு களை மய்யமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சைபர் மோசடி கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய காவல் துறை, அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது 

இதுகுறித்து சைபர் மோசடி தடுப்பு காவல் துறையினர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் னர் ரிஷப் சர்மா வீதிகளில் காய்கறி, பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார். கரோனா ஊரடங்கு சம யத்தில் அவரது தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டது.  வேறு வருவாய் எதுவுமே இல்லாததால் குடும்பத்தை நடத்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகளை பயன்படுத்தினார்  இந்த சமயத்தில், ரிஷப் சர்மா அவரது இளம் வயது நண்பர் ஒருவரைச் சந் தித்தார். அவர் இணைய மோசடிகளில் ஈடுபட்டு வருபவர். அவர் சர்மா வுக்கு மோசடி வலைப் பின்னல் குறித்து விளக்கி, அவரையும் அதில் ஈடு படும்படி கூறியுள்ளார். 

இதையடுத்து சர்மா வும் சைபர் மோசடிகளில் ஈடுபட ஆரம்பித்தார். ஆறு மாதங்களுக்கு முன் பாக சைபர் மோசடியில் அவர் களம் இறங்கினார். அதற்குள்ளாக ரூ.21 கோடி ஈட்டியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் அவர் மோசடியில் ஈடு பட்டுள்ளார். 10 மாநி லங்களில் பதிவான 35 வழக்குகளில் ரிஷப் சர்மா வுக்கு தொடர்பு இருப் பது தெரியவந்துள்ளது. அவருக்கு வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரு கிறோம். இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர். 

இந்த நிலையில் இவ ரோடு தொடர்புடைய நபர்கள் சுமார் 400 கோடிகள் வரை மோசடி செய்திருக்கலாம் என்றும் அதற்கு இவரும் காரணமாக இருந்துள் ளார் என்றும் இவருக்கு கமிசன் தொகையாக எவ் வளவு கிடைத்துள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment