பருவ மழையை எதிர்கொள்ள 5,000 நிவாரண முகாம்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பான முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

பருவ மழையை எதிர்கொள்ள 5,000 நிவாரண முகாம்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பான முடிவு

சென்னை, நவ. 4- வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளி லும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்தது. இதைத்தொடர்ந்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. அதன் விவரம் வருமாறு:- மாநில, மாவட்ட அவசர கால செயல்பாட்டு மய்யங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளு டனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வரு கின்றன. பொதுமக்கள், வாட்ஸ்அப் எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.

424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளி பரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன. பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் குறித்து நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. ஜிழிஷிவிகிஸிஜி செயலி மூலமாகவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது. 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பா ளர்களுக்கு பேரிடர் மேலாண்மையில் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளதோடு, 16 மாவட்டங்களில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகர ணங்கள் மற்றும் நிவாரணப் பொருள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாது காப்பு மய்யங்கள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்ட பங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப் பட்டுள்ளன. 

பேரிடர் காலங்களில் தேடல், மீட்புப் பணிகளை துரித மாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம் புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்கள் அரக்கோணத்திலும், சென்னையிலும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

No comments:

Post a Comment