சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரம்

உத்தர்காசி, நவ. 27- உத்தர காண்ட் மாநிலத்தின் உத்தர் காசி மாவட்டத்தில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப் படும் சுரங்க பாதையில் கடந்த 12ஆம் தேதி மண்சரிவு ஏற்பட் டது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். 

அவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் உள்பட பலதரப்பட்ட மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. தொழிலாளர்களை பத்திரமாக மீட்க பல திட்டங்கள் ஆராயப்பட்ட நிலையில் இடி பாடுகளில் கிடைமட்டாக துளையிட்டு அதனுள் குழாயை செலுத்தி தொழிலாளர்களை மீட்க முடிவு எடுக்கப்பட்டது. 

இதற்காக ராட்சத எந்தி ரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளின் பக்கவாட்டில் துளையிடப்பட்டன. கடின மான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு எந்திரங் கள் பழுதாகின. தொடர்ந்து, அமெரிக்க தயாரிப்பு 'ஆகர்' எந்திரம் கொண்டு துளையிடும் பணிகள் தொடங்கின. இதில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இடிபாடுகளுக்குள் இருந்து எதிர்படும் இடையூறுகளால் துளையிடும் பணி இடை இடையே நிறுத்தப்பட்டாலும் மீட்புக் குழுவினர் முழு நம்பிக் கையுடன் மீட்புப் பணிகளை தொடர்ந்தனர். இதன் மூலம் 57 மீட்டர் நீளமுள்ள இடிபாடு பகுதியில் கிட்டத்தட்ட 47 மீட் டர் தூரத்துக்கு துளையிடப் பட்டு அதனுள் இரும்புக் குழாய் செலுத்தப்பட்டது.

இதனால் மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட தாகவும், விரைவிலையே தொழி லாளர்கள் மீட்கப்பட்டுவிடுவார் கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில்தான் 24.11.2023 அன்று இரவு இடிபாடுகளில் துளையிடும் 'ஆகர்' எந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இடிபாடு களுக்குள் சிக்கிக்கொண்டன. இது மீட்புப் பணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

'ஆகர்' எந்திரம் பழுதடைந்து விட்டதால் இனி அதை கொண்டு துளையிடுவது சாத்தியமில்லை என்பதால் மாற்று நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மீட்புக் குழுக் கள் தள்ளப்பட்டுள்ளன. 

அதன்படி இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 'ஆகர்' எந்திரத் தின் பிளேடுகளை வெட்டி எடுத்த பிறகு, எஞ்சியுள்ள 10-12 மீட்டர் தூரத்திலான இடிபாடு களை ஆட்கள் மூலம் துளையிட ஆலோசிக்கப்பட்டது.

ஆகர் எந்திரத்தின் பிளேடு களை வெட்டி எடுக்க 'பிளாஸ்மா கட்டர்' என்கிற நவீன எந்திரம் அய்தராபாத்தில் இருந்து வர வழைக்கப்பட்டது. அந்த எந்தி ரத்தை பயன்படுத்தி இடி பாடுகளில் இருந்து 'ஆகர்' எந் திரத்தின் பிளேடுகளை முழுமை யாக வெளியே எடுக்கும் பணி கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இதற்கிடையில் மாற்று முயற்சியாக சுரங்க பாதையின் மேற்பகுதியில் இருந்து அடிப் பாகம் வரை செங்குத்தாக துளையிடும் பணியில் மீட்புக் குழுக்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

இதற்கான பணிகள் ஏற் கெனவே தொடங்கியிருந்தா லும், அது 2-ஆவது தேர்வாக கருதப்பட்டதால் பணிகள் மித மான வேகத்தில் நடந்து வந்தன.

தற்போது அந்தப் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதனி டையே மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அங்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ராணு வத்தின் பொறியாளர் குழுவான மெட்ராஸ் சாப்பர்சின் ஒரு பிரிவு, நேற்று அங்கு சென்ற டைந்தது.

இந்நிலையில் உத்தர்காசி யின் சுரங்கப்பாதையில் மொத் தம் 19.2 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி நிறைவடைந் துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்ட மைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (ழிபிமிஞிசிலி) நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அகமது தெரிவித்தார். 

உத்தரகாசியில் செய்தியா ளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நாங்கள் சுமார் 19.2 மீட்டர் தோண்டும் பணியை முடித்துள் ளோம். நவம்பர் 30ஆம் தேதிக் குள், அதாவது நான்கு நாட் களுக்குள் 86 மீட்டர் துளையிட வேண்டும். மேலும் தடைகள் இருக்காது என்று நம்புகிறேன். குறித்த நேரத்தில் பணிகள் முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment