நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றால் நாம் அடையாளம் காட்டுபவரே பிரதமர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றால் நாம் அடையாளம் காட்டுபவரே பிரதமர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, நவ. 27- வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான், நாம் அடையாளம் காட்டுபவரை பிரத மராக்க முடியும் என்று திமுக தலை வரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் 26.11.2023 அன்று நடை பெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியது:

மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். வரும் தேர்தல் மிக முக்கியமான தேர்த லாகும். இதில், தமிழ்நாடு, புதுச் சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற் றால்தான் நாம் அடையாளம் காட்டுபவரை பிரதமராக்க முடி யும். மக்களவைத் தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர் இவர்தான் என எதுவும் முடிவு செய்யவில்லை. மக்களிடம் செல்வாக்கும் நற் பெயரும் உள்ளவருக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.

தி.மு.க.வின் இளைஞரணிச் செயலராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அணியின் பணிகள் பல மடங்கு வேகமெடுத் துள்ளது. சேலத்தில் டிச.17-ஆம் தேதி நடைபெறும் இளைஞரணி மாநாடு, புதிய வாக்காளர்களை ஈர்க்கும் மாநாடாகவும், திமுகவின் வலிமையைக் காட்டும் மாநாடா கவும் இருக்க வேண்டும்.

தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகளை தலைமை பார்த்துக் கொள்ளும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில், திமுக பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப் புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலர் கனிமொழி மற்றும் மாவட்டச் செயலர்கள் 72 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

No comments:

Post a Comment