ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க.,வுக்கு தாவ 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருந்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க.,வுக்கு தாவ 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருந்தனர்

-பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு

சென்னை,நவ.22- 'அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து விட்டு, தி.மு.க., ஆட்சியை ஏற்படுத்த அ.தி.மு.க.,வின், 40 சட்டமன்ற உறுப்பி னர்கள் தி.மு.க., பக்கம் வரத் தயாராக இருந்தனர்' என, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப் பாவு பேசினார்.

சென்னை அடையா றில், நேற்று (21.11.2023) நடந்த தனியார் நிகழ்ச்சி யில் அவர் பேசியதாவது: 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போதும் கொள்கை பிடிப்பும், லட்சியமும் உடையவர். அதைப்பார்த்து பல முறை பிரமித்திருக்கி றேன். அவர் லட்சியத் தோடு செயல்பட்டார் என்பதற்கு, உதாரணமாக ரகசிய தகவல் ஒன்றை சொல்கிறேன்.

கடந்த, 2016இல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த தும், அ.தி.மு.க., பிளவுபட் டது. 18 சட்டமன்ற உறுப் பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்தனர். அந்த நேரத் தில் தான், டி.டி.வி.தின கரன் சிறைக்கு சென்றார்.

அப்போது, அரசிய லில் இருக்கும் நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அ.தி.மு.க., வில் இருக்கும் எம்.எல். ஏ.,க்கள் 40 பேர், தி.மு.க., வுக்கு வரத் தயாராக இருக்கின்றனர். அவர்க ளிடம் பேசிடலாமா என்று கேட்டார்.

தலைவர் மு.க.ஸ்டா லினிடம் கேட்டுச் சொல் கிறேன் என்று சொல்லி விட்டு, தலைவரை தொடர்பு கொண்டேன். பொறுமையாக எல்லா வற்றையும் கேட்டவர், 'அந்த 40 பேரை வைத்து, தி.மு.க., ஆட்சி அமைக் கலாம்.

என திட்டம் போட் டுத்தானே, இதை என் னிடம் சொல்கிறீர்கள். அப்படியொரு நினைப்பு இருந்தால், மறந்து விடுங்கள். நான் மக்களை நம்புகிறேன்; அவர்கள் நமக்கு ஓட்டளித்து, ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தால், அதை ஏற்போம்' என்றார். இப்படி லட்சியத்தோடு செயல்படுகிறவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment