தெலங்கானா தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.4,000 ராகுல்காந்தி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

தெலங்கானா தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.4,000 ராகுல்காந்தி அறிவிப்பு

அய்தராபாத், நவ.4 தெலங் கானாவில் நவம்பர் 30 ஆ-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற் றாக வேண்டும் என்ற நோக்குடன் இரு கட்சிகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் பூபால் பள்ளி மாவட்டம் காலேஷ்வரம் என்ற இடத்தில் 2.11.2023 அன்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், 

"தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஊழல் செய்து கொள்ளையடித்து பெரும் சொத்து சேர்த்துள்ளார். அவரது ஊழலால் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி  சார்பில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மாதம் ரூ. 4 ஆயிரம் பெற்று பயனடைவார்கள். அந்தத் தொகையை அவர்கள் சேமிக்க முடியும். இதன் முதற்கட்டமாக மாதம் ரூ.2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும். சிலிண்டர் மானிய விலையில் 

ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ.1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இது தான் மக்களின் அரசு. ஆனால், தெலங்கானா முதலமைச்சர் சநதிரசேகர் ராவ் ரூ.1 லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார்'' என்று குற்றம் சாட்டினார்.


No comments:

Post a Comment