5ஆவது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் சென்னை யில் தொடங்கி வைத்தார். அப் போது அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்கள் சந் திப்பில், தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே, தமிழ்நாட்டில் மருத் துவ முகாம்கள் நடைபெற்றன. அக்டோபர் 29, நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று முடிந் தன.
இதில் ஒவ்வொரு முறையும் 1000 முதல் 2000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள் ளன. இதுவரையில் 8,380 மருத் துவ முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த மருத்துவ முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமா னோர் கலந்துகொண்டாலும், அதில் 400 - 500 பேருக்கு மட் டுமே நோய் பாதிப்பு இருந் துள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் டிசம்பர் 30 வரையில் வாரந்தோறும் சனிக்கிழமை களில் நடைபெற உள்ளன.
சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், ஒரு மண்ட லத்துக்கு 3 முகாம்கள் என மொத்தம் 45 முகாம்கள் நடை பெற உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் (நவம்பர் இறுதி கட்டம்) தற்போது வரை யில் 7,059 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகை யில் இந்த எண்ணிக்கை என்பது குறைவு. அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு தினமும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கால்வலி, தலைவலி என எல்லா பரிசோதனைகளும் எடுக்கப்படுகின்றன. கால் மரத் துப்போவது போல இருப்பதால், பிசியோதெரபியும் செய்யப்படு கிறது. செந்தில் பாலாஜி எப் போது குணமாவார் என்பதை மருத்துவக் குழுவினர் கூறுவார் கள்.
சென்னை மாநகராட்சி முழுக்க தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதில் வீட்டு வளர்ப்பு நாய்கள் எத்தனை, தெரு நாய்கள் எத் தனை, எத்தனை நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தெருநாய் ஒருவரை கடித் தாலே மாநகராட்சிக்கு அலை பேசியில் புகார் கூறி விடுங்கள். சென்னை மாநகராட்சியில் ஒரு பகுதியில் ஒரு தெருநாய் 27 பேரை கடித்ததாக கூறுகிறார் கள்.
ஒருவரை கடித்த உடனே மக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்து இருக்கலாம்.
தெருநாய் கடித்த அனை வருக்கும் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக் கப்பட்டது.
அவர்கள் தற்போது நல முடன் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியா ளர்கள் சந்திப்பில் குறிப்பிட் டார்.
No comments:
Post a Comment