இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 332 லட்சம் கோடியாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 332 லட்சம் கோடியாம்!

பொய் செய்தி பரப்புவதற்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, நவ.21 இந்தி யாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி ரூ.332 லட்சம் கோடியை தாண் டியதாக பொய்ச் செய்தி பரப்புவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித் துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் டாலராக (ரூ.415 லட்சம் கோடி) உயர்த்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள் ளது. இதற்கிடையே, மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரை (ரூ.332 லட்சம் கோடி) தாண்டி விட்ட தாக நேற்று அதிகாரப் பூர்வமற்ற தகவல் வெளி யானது. 

அதை ஒன்றிய நிதி அமைச்சகமோ, தேசிய புள்ளியியல் அலுவல கமோ உறுதிப்படுத்தவில்லை. 

இருப்பினும், ஒன்றிய அமைச்சர்கள் கஜேந் திர சிங் ஷெகாவத், கிஷன் ரெட்டி, மராட்டிய மாநில துணை முதல மைச்சர் தேவேந்திர பட் னாவிஸ், ஆந்திர மாநில பா.ஜனதா தலைவர் புரந்தரேஸ்வரி, பிரபல தொழில் அதிபர் அதானி ஆகியோர் அதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 இந்நிலையில், அது பொய்ச்செய்தி என்று காங்கிரஸ் கட்சி கூறியுள் ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத் தில் கூறியிருப்பதாவது:- 19-ஆம் தேதி பிற்பகலில், கிரிக்கெட் போட்டியை காண்பதில் நாடு ஆர்வ மாக இருந்தபோது, மோடி அரசுக்கு தம்பட் டம் அடிப்பவர்களான ராஜஸ்தான், தெலங் கானா மாநிலங்களை சேர்ந்த மூத்த ஒன்றிய அமைச்சர்கள், மராட்டிய மாநில துணை முதல மைச்சர், பிரதமருக்கு மிகவும் பிடித்த தொழில் அதிபர் ஆகியோர் இந்தி யாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 4 டிரில் லியன் டாலரை தாண்டிய தாக பதிவு வெளியிட் டனர். அது, கூடுதல் பரவ சத்தை உருவாக்க பரப் பப் பட்ட முற்றிலும் பொய் யான செய்தி.   தலைப்புச் செய்தியில் இடம் பிடிக் கவும் நடத்தப்பட்ட பரி தாபகரமான முயற்சி. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment