மும்பை, நவ. 5- பாட்டா நிறுவனத் தின் ஷோரூமில் வேலை செய்த ஊழியர்கள், வேலை நேரம் நீட்டிக் கப்பட்டதை எதிர்த்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந் நிலையில், அந்த ஊழியர்களுக்கு ரூ. 33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு நட்டத்தில் இயங்குவதாக கூறிய பாட்டா ஷூ, காலணி நிறுவனம், மும்பை, தானே மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள தனது விற்பனையகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வார விடுமுறையை ரத்து செய்தது. தினமும் இரவு 9.30 மணி வரை வேலை பார்த்தாக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வாரத்தில் ஏழு நாள்களும், அதுவும் 8 மணி நேரத்திற்கு அதிகமாகவும் உழைக்க வேண்டிய நிலையில், பெரும் இன்னலை எதிர்கொண்ட தொழிலாளர்கள், நிறுவனத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புக் குரல் எழுப் பினர். அவ்வாறு எதிர்ப்பு தெரி வித்த அனைவரையும் வேலையி லிருந்து நீக்கி பழிவாங்கியது பாட்டா நிறுவனம்.
இதனால், ஆவேசமடைந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கம் மூலமாக தொழிலாளர் நடைமுறை கள் சட்டம் 1971 (விஸிஜிஹி & றிஹிலிறி சட்டம்) பிரிவு 28(1)இன் கீழ் தொழி லாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேல்ஸ்மேன்கள் தரப் பில் நியாயம் இருப்பதாக கூறி, பாதி ஊதியத்துடன் மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டது. எனி னும் உயர்நீதிமன்றம் தொழிலாளர் கள், தங்கள் தரப்பில் எந்தத் தவ றும் இல்லாத நிலையில், 100 சத விகிதம் ஊதியத்துடன் பணியமர்த் தப்பட வேண்டும் என்றும் வாதிட் டனர். மறுபுறத்தில் பாட்டா நிறு வனமோ, ‘சேல்ஸ்மேன்கள்' என்ப வர்கள் தொழிலாளர்கள் கிடை யாது. என்றும், எனவே தொழிலா ளர் நலச்சட்டங்கள் இவர்களுக்கு பொருந்தாது என கூறியது. பாதிச் சம்பளமும் கூட தர முடியாது என்று தெரிவித்தது. ஆனால், ‘சேல்ஸ்மேன்கள்' என்பவர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர் களை நிறுவனத்தின் பொருட்களை வாங்க வைக்கப் பாடுபடுகிறார்கள். எனவே, அவர்களும் தொழிலா ளர்கள்தான். அவர்களுக்கு தொழி லாளர் நலச்சட்டம் பொருந்தும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், சம்பவம் நடை பெற்று 17 ஆண்டுகள் ஆகிவிட்ட தால் தற்போது வழக்கு தொடுத்த வர்கள் மீண்டும் அதே பணியை செய்யும் சூழ லில் இல்லை. எனவே கடந்த 17 ஆண்டுகளாக அவர் களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் 75 சத விகிதத்தை கொடுக்கவேண்டும் என உத்தர விட்டிருக்கும் மும்பை உயர்நீதி மன்றம், தொழிலாளர்கள் கடைசி யாக வாங்கிய ஊதியத்தைக் கணக் கிட்டு இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கை மொத்தம் 7 பேர் தொடுத்திருந்த நிலையில், நீதி மன்ற உத்தரவால் இவர்களுக்கு ரூ. 19.5 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இழப் பீடை 4 மாதத்திற்குள் வழங்க வேண்டும்; பாட்டா நிறுவனம் அதற்கு தவறும் பட்சத்தில் 8 சத விகிதம் வரை வட்டி விதிக்கப் படும் என்றும் மும்பை நீதி மன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
No comments:
Post a Comment