கடந்த மூன்று வாரங்களில் 3000 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு 6000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

கடந்த மூன்று வாரங்களில் 3000 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு 6000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை, நவ.21-  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 18.11.2023 அன்று சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்ததாவது,

கடந்த மாதம் 23.10.2023ஆம் தேதி தொடங்கி வருகின்ற டிசம்பர் 30.12.2023ஆம் தேதி வரை இடைப்பட்ட சனிக்கிழ மைகளில் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த மாதம் முதல் தற் போது வரை 4 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் நடை பெற்ற முகாம்களை பொறுத்த வரை ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாம் களில் பயன்பெற்றிருந்தனர். 

ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என்று அறிவிக்கப் பட்டு ஒவ்வொரு வாரமும் 2000த்திற்கும் மேற்பட்ட முகாம் கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் நடை பெறும் மருத்துவ முகாம்களில் 476 மருத்துவ நடமாடும் குழுக் களும், 805 RBSK வாகனங்களின் மூலம் பள்ளிச்சிறார்களுக்கான முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று வாரங்களில் 6000-த்திற்கும் மேற்பட்ட முகாம் கள் நடத்தப்பட்டுள்ளது. இன்று 4ஆவது வாரம் நொச்சிக்குப்பம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் 25.11.2023ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது. பெருநகர சென்னை மாநக ராட்சியினைப் பொறுத்தவரை ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 என்கின்ற வகையில் 45 மருத்துவ முகாம்கள் திட்ட மிடப்பட்டு நடத்தப்பட்டு வரு கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, இன்புளுயன்சா காய்ச் சல், அதிகரிக்க வாய்ப்பு இருப்ப தால் இதனைக் கட்டுப்படுத்து கின்ற நோக்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 

இதுவரை நடைபெற்ற முகாம் களில் சுமார் 500க்கும் மேற்பட்ட வர்களுக்கு காய்ச்சல்களும், வறண்ட இருமல்களும், சளி போன்ற பல்வேறு பாதிப்புக ளுக்கு உள்ளானவர்கள் கண்ட றியப்படுகிறார்கள். அப்படி கண்டறியப்படுபவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றது. ஒன்றிய அரசு பல் வேறு மாநிலங்களில் டெங்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்கள். 

ஆனால் தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே மக் கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநக ராட்சி மூலமாகவும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறோம். 

பல்வேறு துறை செயலாளர் களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட அதிகாரி களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம், மக்கள் பிரதிநிகளுட னான ஒருங்கிணைப்புக் கூட் டம், தலைமைச் செயலாளர் களுடனான அனைத்து துறை களின் ஒருங்கிணைப்புக் கூட் டம் என்று தொடர்ச்சியாக நடத்தி மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து திட்ட மிடப்பட்டது.

இப்படி பல நடவடிக்கை களின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்குவினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,777 பேர் என்கின்ற வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரு பவர்களின் எண்ணிக்கை 564 பேர், நேற்றுக்கான பாதிப்பு 52, ஒவ்வொரு நாளும் 40 பேர் டெங்குவினால் பாதிக்கப்படு கின்றனர்.

தமிழ்நாட்டு அரசினைப் பொறுத்தவரை புகை அடிக் கும் மருந்துகள்  Fogging Machines 16,005 லிட்டரும், Temephos என்கின்ற மருந்து 44,891 லிட்டரும் கையிருப்பில் இருக்கின்றது. Phyrethrum  என் கின்ற மருந்து 61,513 லிட்டர் கையிருப்பில் இருக்கின்றது.Technical Malathion என்கின்ற மருந்து 10561 லிட்டர் கையி ருப்பில் இருக்கின்றது.

தமிழ்நாட்டின் முதலமைச் சர் அவர்களால் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் திறந்து வைக்கப்பட் டுள்ளன.

708 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் திறந்து வைக்கப் படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அதில் 500க்கும் மேற்பட்ட நலவாழ்வு மய்யங்கள் இதுவரை திறந்து வைக்கப்பட் டுள்ளன. இந்த 500 நலவாழ்வு மய்யங்களில் 140 நலவாழ்வு மய்யங்கள் சென்னையில் மட் டுமே இருக்கின்றன.

இந்த 140இல் ஒன்று நொச் சிக்குப்பம் பகுதியில் உள்ள இம்மருத்துவமனை. இந்த நல வாழ்வு மய்யத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட பொது மக் கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நலவாழ்வு மய்யத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு உதவியாளர் என்று நான்கு பணியிடங்களுடன் இம்மருத் துவமனை இயங்கி வருகிறது.

சென்னை மாநகராட்சி யைப் பொறுத்தவரை 200 நலவாழ்வு மய்யங்கள் அமைக் கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. எனவே தற்சமயம் 140 நலவாழ்வு மய்யங்கள் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்க ளால் திறந்து வைக்கப்பட்டிருக் கிறது.

தற்சமயம் 35 நலவாழ்வு மய்யங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடிவுறும் தருவாயில் இருக்கின்றது. தமிழ்நாடு முழுவதிலும் 120 நலவாழ்வு மய்யங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடிவுற்றிருக்கிறது.

இந்த நலவாழ்வு மய்யங்க ளுக்கு மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் நியமிக்கும் அரசு ஆணை வெளியிடப் பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இப்பணிகள் முடிவடைந்த வுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலை மைச் செயலாளர், ஆணை யாளர் மருத்துவர் ஜெ.ராதா கிருஷ்ணன், துணை ஆணை யாளர் (கல்வி) ஷரண்யாஅறி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், பொது சுகாதாரம் மற் றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மருத்துவர் டி.சி.செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் மருத்துவர் 

எம்.ஜெகதீசன், மாமன்ற உறுப் பினர் அ.ரேவதி, மண்டல அலு வலர் உள்ளிட்ட உயரலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment