பதிலடிப் பக்கம் : திராவிடம் என்றால் எரிவது ஏன்? (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

பதிலடிப் பக்கம் : திராவிடம் என்றால் எரிவது ஏன்? (2)

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

மின்சாரம்

கேள்வி: மனைவி இறந்தபின் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் தலித் சமுதாயப் பெண்களை ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை?

பதில்: உயர்ஜாதி பெண்ணை மணக்கவில்லை என்றால், அது சீர்திருத்தக் கல்யாணமாகுமா?

பதிலடி: தந்தை பெரியாரையும், அண்ணல் அம் பேத்கரையும் எந்தப் பார்வையில் பார்க்கிறது இந்தப் பார்ப்பனர் கூட்டம்? பெரியார் செய்து கொண்டது இயக்க எதிர்கால நலன் கருதி செய்து கொண்ட ஏற்பாடு.

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிபோல் மடத்துக்கு வந்த எழுத்தாளர் அனுராதா ரமணனைக் கையைப் பிடித்தா இழுத்தார்கள். அப்பொழுது இந்த குருமூர்த்தி அய்யர் ஜெயேந்திரருக்குத்தானே வக் காலத்து வாங்கினார்.

அந்த எழுத்தாளர் அம்மையாரிடம் அதற்காக ‘மொத்தடி' வாங்கியதெல்லாம் மறந்து விட்டதா?

- - - - -

கேள்வி: புண்ணியம் கிடைக்க என்ன செய்யக் கூடாது?

பதில்: பாபம் செய்யக் கூடாது.

பதிலடி: 14 ஆண்டு பஞ்சமாபாதகம் செய்தாலும் கும்பகோணத்தில் மகா மகத்தன்று குட்டையில் மூழ்கினால் தான் பாவங்கள் எல்லாம் தொலைந்து போகுமே - அப்படி எளிதாகப் பாவத்திற்குப் பரிகாரம் என்று எழுதி வைத்தவர்களா பாவ புண்ணியம் பற்றிப் பேசுவது?

- - - - -

கேள்வி: நல்ல நிர்வாகம் என்பதற்கான சரியான அளவுகோல் என்ன?

பதில்: ஆண்கள் இடஒதுக்கீடுக்கு அலையும்படி நிர்வாகம் செய்வதுதான் நல்ல நிர்வாகத்தின் அளவு கோல்.

பதிலடி: பெண்கள் என்றால் - பா.ஜ.க.வின் நிர்மலா சீதாராமனையும் தமிழிசையையும் கேலி செய்வது புரிகிறது. காரணம் அவாளின் மனுதர்மம்!

- - - - -

கேள்வி: எது அபாயம்... அதிகமா யோசிப்பதா, அதிகமாக நேசிப்பதா?

பதில்: யோசிக்காமல் நேசிப்பதுதான் அபாயம்.

பதிலடி: ஆமாம் யோசனை, சிந்தனை என்பது எல்லாம் அவாளுக்கு ஒவ்வாமையைத்தான் ஏற்படுத் தும். யோசித்திருந்தால் ஒரு கடவுள், குளித்துக் கொண்டிருந்த பெண்ணை எட்டிப் பார்த்திருப்பானா? அதுவும் சரிதான், அப்படி செய்யாவிட்டால் ஒரு பிள்ளையார் பிறந்திருப்பாரா என்ன?

- - - - -

கேள்வி: ‘தமிழ்நாட்டில் காந்தி பிறந்திருந்தால், ஜாதிச் சங்கத் தலைவராக அவரை மாற்றி இருப்பார்கள்' என்ற ஆளுநர் ரவியின் பேச்சு குறித்து?

பதில்: தமிழ்நாட்டில் காந்தி பிறந்திருந்தால் அவரை ஜாதிச் சங்கத் தலைவராக மாற்றியிருப்பார்களா என் பது தெரியாது. ஹிந்திப் பிரச்சார சபையை அமைத்த அவரை நிச்சயம், ஹிந்தி வெறியர் என்று சாடியிருப்பார்கள்.

பதிலடி: ‘ராம் ராம்' என்று காந்தியார் எதற்கெடுத் தாலும் உச்சரித்த போது அவரை "மகாத்மா" ஆக்கிய வர்கள் - நான் சொல்லும் ராமன் வேறு இராமாயண ராமன் வேறு என்று சொன்னவுடனேயே அவரைத் தீர்த்து கட்டியவர்கள் யார்?

சுட்டவனும் ஹிந்து - சுடப்பட்டவரும் ஹிந்துதானே!

- - - - - 

கேள்வி: ‘அமலாக்கத் துறையின் சோதனையைக் கண்டு பதுங்க மாட்டேன்' என்கிறாரே ஆ.ராசா?

பதில்: அமலாக்கத் துறையைக் கண்டு நெஞ்சுவலி வந்து அழும் அமைச்சர்களைக் கிண்டல் செய்கிறார் ஆ.ராசா.

பதிலடி: ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோயைக்கூடக் கேலி செய்யும் கீழ்த்தர மனிதர்கள் இவர்கள். மானமிகு ஆ.இராசா மீது அபாண்டமாக 2ஜி ஊழல் என்று கிளப்பிவிட்ட கூட்டம் கடைசியில் மூக்கறுபட்டதுதான் மிச்சம்.

- - - - -

கேள்வி: தமிழகத்தில் ஆரியர் திராவிடர் என்று தனியாகக் கிடையாது என்று கருத்துக் கூறிய தமிழக ஆளுநருக்குப் பதவியிலிருந்து விலகிவிட்டு அரசியல் செய்யுங்கள் என்று டி.ஆர்.பாலு காட்டமாகப் பதில் அளித்துள்ளாரே?

பதில்: ஆரியம் vs திராவிடம் என்பதுதான் தமிழக அரசியல், அது இல்லை என்றால் அரசியலே இல்லை. டி.ஆர். பாலு கூறுவது உண்மையே.

பதிலடி: நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோர்; நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதராகிய எம்.எஸ்.கோல்வாக்கர் என்ற ஆரியப் பார்ப்பனர் எழுதி இருக்கிறாரே? (Bunch of Thoughts) அவரைக் கேலி செய்கிறாரா? - சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று கூறிய தொல்லியல் துறை ஆய்வாளர், மேனாள் ‘தினமணி' ஆசிரியர் அய்ராவதம் மகாதேவனை மட்டம் தட்டுகிறாரா மிஸ்டர் குருமூர்த்தி அய்யர்வாள்?

- - - - -

கேள்வி: உங்கள்தனிப்பட்ட வாழ்வில் சனாதன தர்மத்தை எத்தனை சதவிகிதம் பின்பற்றுகிறீர்கள்?

பதில்: "நான் வேதம், உபநிஷதம், புராணம் ஆகிய அனைத்து ஹிந்து நூல்கள், அவதாரங்கள், மறுபிறப்பு, வக்கிரமானதல்லாத வேத அடிப்படையிலான வர்ண தர்மம், பசுப் பாதுகாப்பு, உருவ வழிபாடு அனைத்திலும் நம்பிக்கை உள்ள சனாதன தர்ம ஹிந்து" (1) என்று மகாத்மா காந்தி கூறிக்கொண்டர். நான் காந்தி போன்ற 100 சதவிகிதம் சனாதன தர்ம ஹிந்து.

பதிலடி: பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. ஸநாதனம் என்றால் வேதம், உபநிஷதம்... மறுபிறப்பு களை நம்ப வேண்டும் - பிறப்பின் அடிப்படையிலான வருணதர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என் பதைத் தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டதே துக்ளக்! ஸநாதனத்தை ஒழிப்போம் என்பதில் உள்ள நியாயம் இப்பொழுது புரிகிறதா?

- - - - -

கேள்வி: நீங்கள் ஆன்மிகத்திலும் இருக்கிறீர்கள், அரசியலிலும் இருக்கிறீர்கள். இதுதான் ஆன்மிக அரசியலா?

பதில்: அரசியலில்லாத ஆன்மிகத்தில் ஊறிய என்னைக் காஞ்சிப் பெரியவர் ஆன்மிகம் இல்லாத அரசியலில் நுழைய விடவில்லை.

பதிலடி: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஆன்மிகவாதியா வதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந் திருக்க வேண்டும் என்று குருமூர்த்தி அய்யரின் குரு நாதர் திருவாளர் சோ.ராமசாமி அய்யங்கார் (‘துக்ளக்', 26.10.2016, பக். 23) சொன்னது பலித்துவிட்டது.

- - - - -

கேள்வி: சமீபத்தில் தந்தி டி.வி.யில் ஏ2பி விவகாரம் குறித்த பேட்டியில், பிராமணர்கள் என்று துவங்கியவர், அதென்ன பிராமணர்கள், பார்ப்பனர்கள் என்று தொடர்ந்தார். பார்ப்பனர் என்றால் குறைத்து மதிப்பிடு வதாக அர்த்தமா?

பதில்: பிராமணன் என்பது ஸம்ஸ்கிருதம், அந்த ணன் என்பது தமிழ், பார்ப்பனன் என்பது திராவிடம் - பேட்டியைத் தொடங்கியவர் தமிழரல்ல, திராவிடர்.

பதிலடி: "அந்தணன் என்போன் அறவோன்" என் றல்லவா திருவள்ளுவர் சொல்லியுள்ளார். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, என்று பகரும் பார்ப்பனர்கள் எப்படி அந்தணர் ஆவார்கள்?

"நந்தனைப்போல் ஒரு அந்தணன் இந்த நானிலத் தில் உண்டா?" என்று பார்ப்பன பாரதி சவுக்கடி கொடுத் தும் புத்தி வரவில்லையே - என் செய்ய!

- - - - -

கேள்வி: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், “ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்" என்று கூறியவர்கள், தற்போது, நீட் தேர்வை ரத்து செய்ய, ‘50 நாளில் 50 லட்சம் கையெழுத்து வாங்கப் போவதாக தெரிவித்து, ‘நீட் விலக்கு எங்கள் இலக்கு' என்று இயக்கம் நடத்தி வருவது பற்றி?

பதில்: தேர்தலில் தோற்ற கட்சிகள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறும், ஜெயித்த தி.மு.க. ‘மக்கள் கையெழுத்தே மகேசன் கையெழுத்து' என்று கூறுகிறது.

பதிலடி: ஒரு மாநில அரசு சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகத்தானே செய்திருக்கிறது. முட்டுக்கட்டை போட்டது யார்? ‘பூணூல் புகழ்' ஆளுநர் இரவியும், பாரதீய ஜனதா என்னும் பார்ப்பன ஆட்சியும்தானே!

ஒரு ஜனநாயக நாட்டில் கையெழுத்து இயக்கம் நடத்துவது கூட இந்த ஜாதி நாயகர்களுக்குப் பொறுக்க வில்லை!

- - - - - 

கேள்வி: ‘தி.மு.க. ஆன்மிகத்துக்கு எதிரி அல்ல' என்று முதல்வர் பேசுவது?

பதில்: தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்துத் தகர்க்கும் நாள் எந்நாளோ என்று தொடங்கிய திராவிடக் கதை, ஹிந்து என்றால் திருடன் என்று கூறி, திருடன் இல்லை மனம் கவர் கள்வன் என்று மாறி, இன்று ஆன்மிகத்துக்கு எதிரி இல்லை என்று தொடர்கிறது. அது சோ கூறியது போல் சந்தனம் பூசி, காவடி எடுப்பதில் போய் முடியும் என்று தோன்று கிறது.

பதிலடி: இந்து என்றால் திருடன் என்று நாம் சொல்லவில்லை - இதோ ஆதாரம்:

In Persian, says our author, the word means slave, and according to Islam, all those who did not embrace Islam were termed as slaves. (Dayanand Saraswati Aur Unka Kaam, Edited by Lala Lajpat Rai, published in Lahore, 1898, in the Introduction).

நம் ஆசிரியர் பாரசீக மொழியில் இவ்வார்த்தைக்கு அடிமையென்று பொருள் கூறுகிறார். மேலும் இசுலாத் தின்படி இசுலாமிய சமயத்தை தழுவிடாதோர் அடிமை கள் எனப்பட்டனர். லாலா லஜபதிராய் பதிப்பித்த தயானந்த சரஸ்வதியில் (அவுர் உன் காகாம் என 1898இல் லாகூரில் வெளியிட்ட நூலின் முன்னுரையில்)

மேலும், ஒரு பாரசீக அகராதி - லக்னோவில் 1964இல் வெளியான லுதேசத் - இ - கிஷ்வாரி எனும் நூல் - இந்து எனில் திருடன் - கொள்ளைக்காரன் - வழிப்பறி செய்பவன் - பொருட்களை சூழ்ச்சியால் அபகரிப்பவன் - அடிமை என்று பொருள் கூறுகிறது.

Furthermore, a Persian dictionary titled Lughet-e-Kishwari, Published in Lucknow in 1964, gives the meaning of the word Hindu as "chore (thief). dakoo (dacoit), raahzan (waylayer), and ghulam (slave)". In another dictionary.

இதன் பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழைமை யான பார்ஸி டிக்ஸ்னரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1964ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்ஸி பதிப்பகம் ஒன்றில் மறுபதிப்பானது. அதில் ஹிந்து என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட விளக்கமானது திருடன் (வழிப்பறி செய்பவன், பொருள்களை சூழ்ச்சி யால் பிடுங்கி ஓடுபவன்), கொள்ளைக்காரன் (இருவர் - அதற்கு மேல் சேர்ந்து கொள்ளையடிப்பவர்கள்), பிறருக்கு எப்போதும் தொல்லை கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும்போது பிடிபட்டு தண்ட னைக்குள்ளாக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அடி மைச் சேவகம் புரிபவர்கள்) என்ற பல்வேறு அளவு களில் பொருள் கொடுத்துள்ளனர்.

- 15.11.2023 துக்ளக் கேள்வி பதிலுக்குப் பதிலடிகள் இவை.


No comments:

Post a Comment