சென்னை, நவ. 27- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 25.11.2023 அன்று மாலை 6.30 மணிக்கு கொடுங்கையூர்-காந்திநகர் தே.செ.கோபால் இல்லத்தில் சிறப் பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார்.
தே.செ. கோபால், கி.இராமலிங்கம், தி.செ.கணேசன் முன்னிலை வகித்தனர்.
வடசென்னை மாவட்ட இளைஞ ரணி தலைவர் நா.பார்த்திபன் கடவுள் மறுப்புக் கூறினார். கொடுங்கையூர் தலைவர் கோ.தங்கமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கழக பணிகள் பற்றி தோழர்கள்
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், மாநில கழக இளைஞரணி செயலாளர் சோ. சுரேசு, வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தள பதி பாண்டியன், பொதுக்குழு உறுப் பினர் தி.செ.கணேசன், மகளிரணித் தலைவர் த.மரகதமணி, இளைஞரணித் துணைத் தலைவர் வ.கலைச்செல்வன், பெரம்பூர் கழக தலைவர் ப.கோபால கிருட்டிணன், மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு, கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் கண்மணி க.துரை, தங்க.தனலட்சுமி, கோ.சரிதா, கொளத்தூர் - பூம்புகார் நகர் ச.இராசேந் திரன், வ.தமிழ்செல்வன், எம்.நித்தியா பதி மற்றும் தோழர்கள் பலரும் கழக பிரச்சாரப் பணிகள் - தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்கள், விடுலை சந்தா சேர்த்தல், சுவரெழுத்துப் பிரச்சாரப் பணிகள் மற்றும் இயக்கப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினர்.
வடசென்னை மாவட்ட கழக செய லாளர் புரசை சு.அன்புச் செலவன் கழகப் பொறுப்பாளர்கள் - தோழர்களை அறிமுகம் செய்து இணைப்புரை வழங் கினார்.
துணைப் பொதுச் செயலாளர் கருத்துரை
நிறைவாக கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இடையறாத பணிகளின் வேகத்தை நாம் பாடமாகக் கொள்ள வேண்டும். அந்தளவுக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் ஒவ் வொருவரும் குறிப்பாக இளைஞரணியினர் கழகப் பணிகளை தீவிரமாகச் செய்ய வேண்டும். தமிழர் தலைவரின் பிறந்த நாளான டிச. 2க்குள் குறுகிய நாள்கள்தான் உள்ளன என்றாலும் உரிய தோழர்களைச் சந்தித்து ‘விடு தலை' சந்தாக்களை கேட்டுப் பெறுங் கள்.
அதற்கப்பாலும் அந்தப் பணிகளைத் தொடரலாம். தமிழர் தலைவரின் அறிவுரைப்படி தெருமுனைக் கூட்டங் களை வடசென்னை மாவட்டத்தில் தொடர் கூட்டங்களாக நடத்துவதன் மூலம் நமது பிரச்சாரம் மக்களிடம் வேகமாகச் சென்றடையும். யூ-டியூப், வாட்ஸ்-அப் அதில் உள்ளிட்ட இணைய வழிப் பிரச்சாரங்களில் கவனம் செலுத்துங்கள். இனஎதிரிகளின் தவறான பிரச்சாங்களுக்கு தக்க மறுப் புகளை உடனுக்குடன் பதிவு செய்வது கட்டாயமானது. இணைய வழிப் பிரச் சாரம் செய்வதும் மிகவும் எளிமை யானது.
நம்முடைய பணிகள் அனைத்தும் மத வாதத்தையும், ஒடுக்கப்பட்ட மக்க ளின் உரிமைகளை நசுக்கியும், மாநில அதிகாரங்களைப் பறித்தும் ஒற்றைத் தன்மையை என்றும் நிலைநிறுத்தும் பாஜகவை 2024 பொதுத் தேர்தலில் வீழ்த்துவதற்கு மிக வன்மையான ஆயுதமாகவே அப்பணிகள் அமையும் - என்று குறிப்பிட்டார்.
தீர்மானங்கள்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா மறைவுக் கும், வடசென்னை பகுதயில் வாழ்ந்து- வடசென்னை மாவட்டத்தின் கழக செயல்பாடுகளுக்கு உற்ற துணை புரிந்து - கழக மாநில மகளிரணிச் செயலாளராக பொறுப்பு வகித்து, கழகத் தொண்டாற்றிய க.பார்வதி அம்மையாரின் மறைவுக்கும் இக்கூட் டம் இரங்கல் தெரிவிக்கிறது.
தமிழர் தலைவரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சுயமரியாதை நாளை முன்னிட்டு கழக கொள்கை விளக்க பிரச்சாரத் தெருமுனைக் கூட்டங்களை வடசென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் கூட்டங்களாக நடத்துவதெனவும், ‘விடுதலை‘ ஏட் டுக்கு தோழர்கள் ஒருங்கிணைந்து உரி யவர்களை சந்தித்து சந்தாக்களை சேர்ப்பதென்றும், மாவட்டத்தில் ஏற் கெனவே செய்யப்பட்டுள்ள சுவரெழுத் துப் பணிகளைப் போன்று - மேலும் விரிவு செய்து அனைத்துப் பகுதிகளிலும் செய்வதெனவும் இக்கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டது.
சந்தா வழங்கல்
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் விடுதலை 5 ஆண்டு சந்தாவிற்கு உரிய தொகையினை கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கினார்.
அதேபோன்று வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தள பதி பாண்டியன், கோ.தங்கமணி - தன லட்சுமி, தொழிலதிபர் எம்.நித்தியாபதி ஆகியோரும் தலா ஒரு ஆண்டு சந்தா என மூன்று ஆண்டு ‘விடுதலை' சந்தாக் களுக்கு உரிய தொகையினை துணைப் பொதுச் செயலாளரிடம் வழங்கினர்.
அய்யப்ப பக்தர் வழங்கிய சந்தா
சபரிமலை செல்வதற்கு மாலை அணிந்துள்ள அய்யப்ப பக்தரான எம்நித்தியாபதி தான் ஏற்கெனவே விடுதலை ஏட்டைப் படித்து வருவதாகக் கூறி தற்போது ஓர் ஆண்டு சந்தாவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரின்சு என்னாரெசு பெரியார் உள் ளிட்ட பொறுப்பாளர்களுக்கு, கொடுங் கையூர் கழகம் சார்பாக கோ.தங்கமணி-தனலட்சுமி இணையர் ஈரோடு தமிழன் பனின் ‘அப்பாலுக்கு அப்பால்' நூலினை வழங்கி சிறப்புச் செய்தனர்.
கொடுங்கையூர் காமராசர் சாலை யில் தந்தை பெரியார் சிலை அமைக் கப்படுவதற்கு உரிய அளவுக்கு ஒத்து ழைப்பு தந்ததைக் குறிப்பிட்டும் - தே.செ.கோபால் அவர்களின் இயக்கப் பணிகளுக்கு உற்ற துணையாய் உள் ளதை எடுத்துக் கூறியும் கோ.சரிதா-தே.செ.கோபால் இணையருக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடையை தோழர்களின் மகிழ்ச்சி கலந்த கையொ லிக்கிடையே அணிவித்தார்.
கூட்டத்தின் இறுதியாக வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment