டிச. 2: சுயமரியாதை நாள் விடுதலை சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

டிச. 2: சுயமரியாதை நாள் விடுதலை சந்தா சேர்ப்பு

தாராபுரம், பொள்ளாச்சி, கோயமுத்தூர், திருப்பூர், திருச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்  தோழர்களுக்கு கனிவான வேண்டுகோள்

90 வயதிலும் நாள்தோறும் இயங்குவதோடு நம்மையும் நம் இனத்தையும் நாளும் இயக்கி வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா  அவர்களின் உயிரோடு உணர் வோடு கலந்துள்ள இனவுரிமை மீட்பு ஏடான  "விடுதலை" நாளிதழ் சந்தாக்களை ஒவ்வொரு கழகத் தோழரும் பெருமளவில் திரட்டிடுவோம் டிசம்பர்-2 நமது தலைவரின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்ந்திடுவோம்.

கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளோம்,

கழகத் தோழர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து விடுதலைச் சந்தா பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திடுமாறு மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர கழக பொறுப் பாளர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

24-11-2023-தாராபுரம் கழக மாவட்டம்

25-11-2023-பொள்ளாச்சி கழக மாவட்டம்

26-11-2023-கோவை கழக மாவட்டம்

27-11-2023-திருப்பூர் கழக மாவட்டம்

28-11-2023-திருச்சி கழக மாவட்டம்

- இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment