டிசம்பர் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு விநாடிக்கு 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் : காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

டிசம்பர் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு விநாடிக்கு 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் : காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை


புதுடில்லி, நவ.24
தமிழ்நாட்டிற்கு காவிரியில் டிச‌ம்பர் மாத இறுதி வரை விநாடிக்கு 2,700 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த அக்.30ஆ-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நவ.22ஆ-ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருநாடக அரசு, இதை மறுபரி சீலனை செய்யுமாறு உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல்செய்தது. இருப் பினும், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீரை திறந்து விட்டது. 

இந்நிலையில், காவிரி ஒழுங் காற்று குழுவின் 90-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டில்லியில் நேற்று (23.11.2023) நடந்தது. காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செயலர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழ் நாடு அரசு சார்பில் காவிரி தொழில் நுட்ப குழுதலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். கரு நாடகா, கேரளா,புதுச்சேரி மாநில நீர்வளத் துறை அதிகாரிகள், வானிலை ஆய்வு மய்ய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கருநாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழை அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.  

தமிழ்நாடு அரசு தரப்பு 

உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு நவம்பர் வரை 150 டிஎம்சி நீரை கருநாடகா திறந்துவிட வேண்டும். ஆனால், இந்த ஆண்டில் இதுவரை 58 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப் பட்டுள்ளது. 92 டிஎம்சிநிலுவையில் உள்ளது. கருநாடகா நீர் திறக்காத தால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. கருநாடகாவில் இப்போதுபரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால், கரு நாடக அரசு விநாடிக்கு13 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண் டும். டிசம்பர் வரை வழங்க வேண் டிய நீருடன், நிலுவையில் உள்ள நீரையும் திறக்க வலியுறுத்த வேண்டும். 

கருநாடக அரசு தரப்பு 

கருநாடகாவில் வறட்சி நிலவுவ தால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவில்நீர் இருப்பு உள்ளது. இருக்கும் நீரை கொண்டே, அடுத்த ஆண்டுவரை பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிஉள்ளது. கடந்த வாரத்தில் பெய்தமழை நீரை முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டோம். 2,600 கன அடிக்கும் அதிகமாகவே நீர் திறக் கப்பட்டது. ஆனால், வரும்நாட் களில் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நீர் திறக்க முடியாத நிலையில் இருக் கிறோம். தமிழ்நாட்டில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், அதை பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து பேசிய காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா, 

‘‘தமிழ்நாட்டின் விவசாய தேவைக்காக கருநாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து டிசம்பர் மாத இறுதிவரை விநாடிக்கு 2,700 கன அடி நீரை திறந்துவிட வேண் டும். அதாவது, நவ.23ஆ-ம் தேதி (நேற்று) முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,700 கன அடி நீர் தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று பரிந்துரை செய்தார்.

இதற்கு கருநாடக விவசாய அமைப்பினரும், கன்னட அமைப் பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத ஆகிய கட்சியினர் காவிரி நீரை தமிழ் நாட்டிற்கு திறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

இன்று ஆலோசனை 

கருநாடக துணை முதலமைச் சரும், நீர்வளத் துறை பொறுப்பு அமைச்சருமான‌ டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை அமல் படுத்துவது சிரமம். கருநாடக அணைகளுக்கு நீர்வரத்து முற்றி லுமாக நின்றுவிட்டது. 

தமிழ்நாட்டிற்கு நீரை திறந்துவிட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த பரிந்துரை குறித்து சட்ட நிபுணர்களுடன் நவ.24ஆ-ம் தேதி (இன்று) ஆலோ சனை நடத்த இருக்கிறேன். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ம‌றுபரிசீலனை செய்யுமாறு, காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மீண்டும் வலியுறுத்த இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment