சென்னை, நவ.9 - மோடி அரசின் விவசாயிகள் விரோத -_ தொழிலாளர் விரோத கொள்கைகளையும் செயல் பாடுகளையும் எதிர்த்து ஆளு நர் மாளிகை முன்பு நடைபெற உள்ள 3 நாள் தொடர் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் கோயம்புத்தூரில் நவ.3, 4 தேதி களில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
அந்நியர்கள் தேசத்தை கொள்ளையடித்ததை எதிர்த்து 1857 இல் நடைபெற்ற முதல் சுதந்திர போராட்டத்தை போன்றதும், விடுதலை போராட்டம் போன்றதொரு மகத் தான போராட்டம்தான் தங்களின் உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டம்தான் டில்லியில் விவசாயிகள் நடத்திய ஓராண்டு கால தொடர் போராட்டமாகும்.
இந்திய வேளாண் சமூக மானது 140 கோடி மக்களுக்கு உணவு அளிப்பது மட்டுமின்றி 68.6 விழுக்காடு வேலை வாய்ப் பினை அளிக்கும் மகத்தான பணியை செய்து வருகிறது.
வேளாண்துறையில் அர சின் முதலீட்டை அதிகரிக்கச் செய்து உணவு பதப்படுத்துதல் - சந்தை மற்றும் கொள்முதல் உள்கட்டமைப்பை அதிகரிக் கச் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் மக் களுக்கான பொருளாதாரத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு பெருமுதலாளி களுக்கு சேவகம் செய்யும் முயற் சியில் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதை விமர் சிக்கும் மற்றும் எதிர்த்து பேசும் குரல் வளையை “உபா” போன்ற சட்டங்களால் நசுக்கும் முயற் சியில் மோடி அரசு ஈடுபட் டுள்ளது.
விவசாயிகளின் டில்லி போராட்டத்தை தொடர்ந்து தனது இணைய தள ஊடகத் தில் காட்சிப்படுத்திய நியூஸ் கிளிக் நிர்வாகத்தினரை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மேலும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரவாத குழுக்களின் மூலம் வெளிநாடு களிலிருந்து நிதி பெற்று நடை பெற்ற போராட்டமாக சித்த ரிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை திரும் பப்பெற்ற போதிலும் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுக ளுக்கும் - அந்நிய முதலாளி களுக்கும் தாரை வார்க்க மோடி அரசு முயற்சித்து வரு கிறது.
தொழில்துறையை பொறுத்த மட்டில் பெருமுதலாளிகளை மேலும் கொழிக்க வைக்கும் நோக்கில் தொழிலாளர்கள் போராட்ட உரிமையை நசுக் கும் வண்ணம் நான்கு தொழி லாளர் தொகுப்புச் சட்டங் களை கொண்டு வந்திருப்பது வன்மையான கண்டனத்திற் குரியது. ஆகவே,
• சி2+50 என்கிற அடிப் படையில் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உத்தர வாதம் அளிக்க வேண்டும்
• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தில் ரூ.600 ஊதியத்துடன் 200 நாட்களாக அறிவிக்க வேண் டும்.
• மின்சார திருத்த மசோதா -2023-அய் திரும்பப் பெற வேண்டும்.
• மாதம் குறைந்த பட்சம் ரூ.26 ஆயிரம் ஊதியம் நிர்ண யிக்க வேண்டும்.
• மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
• போராட்ட உரிமையை பறிக்கச் செய்யும் 4 தொழிலா ளர் சட்டங் களை திரும்பப்பெற வேண்டும்
• விவசாயிகளின் போராட் டங்களை கொச்சைப்படுத்தும் முயற்சியை மோடி அரசு உட னடியாக கைவிட வேண்டும்.
• நியூஸ் கிளிக் மீது புனையப் பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தியும்
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங் கேற்புடன் சக்திமிக்கதாய் நடத்தி, வெற்றி பெறச் செய்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தனது முழு பங்கை ஆற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment