கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 253 கோடி சிறப்பு ஊக்கத்தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 253 கோடி சிறப்பு ஊக்கத்தொகை

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, நவ. 4- சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அர வைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயி களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கரும்பு சாகுபடிப் பரப் பினையும் உற்பத்தியையும் அதி கரிப்பதற்காக, அதிக கரும்பு மக சூலுடன், அதிக சர்க்கரைக் கட் டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் மற்றும் மானிய விலையில் சொட்டு நீர்ப் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் ஆகி யவை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாடு அரசு, நலிவ டைந்து வரும் சர்க்கரை ஆலை களில் புனரமைப்பு, எத்தனால் உற்பத்தித் திட்டம், இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சர்க்கரை ஆலைக ளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கரும்பு விவசாயிகளின் நல னுக்காக அரசு எடுத்த நடவடிக் கைகளினால், 2020-2021 அர வைப் பருவத்தில் 95,000 எக்டே ராக இருந்த கரும்புப் பதிவு, 2022-2023 அரவைப் பருவத்தில் 1,50,000 எக்டேராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 160.54 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித் துள்ளது. மேலும் சர்க்கரைக் கட்டுமா னம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2022-2023 அரவைப் பரு வத்தில் 9.27 சதவிகிதமாக உயர்ந் துள்ளது.

2023-2024-ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக் கையில், 2022-2023 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைக ளுக்கு கரும்பு வழங்கிய தகுதி யுள்ள விவசாயிகளுக்கு டன் னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

ஒன்றிய அரசு 2022-2023-ஆம் அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 -யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு வழங்கி ஆணையிட்டுள்ளது.

சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.3016.25 அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 14 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.195 -யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022-2023 அரவைப் பருவத் தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு சர்க்க ரைத்துறை ஆணையரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வரு கிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட் டுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நல னுக்காக ரூ.253.70 கோடி மதிப் பில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.42 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment