இஸ்ரேல் அராஜகம் காசா மருத்துவமனை முற்றுகை 2300 நோயாளிகள் பரிதவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

இஸ்ரேல் அராஜகம் காசா மருத்துவமனை முற்றுகை 2300 நோயாளிகள் பரிதவிப்பு

காசா, நவ.16  காசா நகரின் வட பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி வாகனங்களுடன் முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் காசா நகரில் மருத்துவமனைகளில் ஹமாஸ் இயக்கத்தினர் பதுங்கியுள்ளனர், ஆயுதங் களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச் சாட்டுகளை மறுத்து காசா மருத்துவமனைகள் இயக் குநர் முகமது ஜாகோட் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்துக்குள் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் இங்கு சிகிச்சை பெறும் மற்றும்தஞ்சம் அடைந்துள்ள குழந்தைகள் உட்பட நோயாளிகள் அனைவரும் பீதியடைந்துள்ள னர். இங்கு 2,300 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இவர்களை வேறுஇடங்களுக்கு மாற்றும் வசதிகள்இல்லை. இந்த மருத்துவமனையில் இன்குபேட்டர் செயல்படாததால் ஏற்கெனவே 3 குழந்தைகள் இறந்து விட்டன. இன்குபேட்டர்களை வழங்க இஸ்ரேல் முன்வந்தும் பலனில்லை. எரி பொருள் இல்லாததால் ஜெனரேட்டர்கள் செயல்பட வில்லை. இங்கு அறுவைச் சிகிச்சைகள் எல்லாம் மயக்க மருந்து வசதியின்றி நடைபெறுகின்றன. இங்குள்ளவர்களுக்கு போதிய உணவு, குடிநீர் வசதி இல்லை.சவக்கிடங்குகளில் அழுகும்உடல்களால் மருத்துவமனைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந் நிலையில் இங்கு பீரங்கிவாகனங்களுடன் இஸ்ரேல் ராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். 

இவ்வாறு முகமது ஜாகோட் கூறியுள்ளார். அல்-ஷிபா மருத்துவமனையின் இந்த அவல நிலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தான் முழு பொறுப் பேற்க வேண்டும் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


No comments:

Post a Comment