காஞ்சிபுரத்தில் 22.11.1925 காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக திரு.வி.க அவர்கள் இருந்தார்கள். அந்த மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை தந்தை பெரியார் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் அனுமதிக்கப் படாமல் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் 'காங்கிரசால் பார்பனரல்லாதார் நன்மை பெறமுடியாது; காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை' என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே அவருடன் ஒரு பெருங்கூட்டம் மாநாட்டை விட்டு வெளியேறியது.
காஞ்சி மாநாட்டின் போது, அங்கேயே பெரியாரின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட் டின் தலைவராக கோவை திரு. டி.ஏ.இராம லிங்க செட்டியாரை அழைத்து பேசிய பெரியார் "தேசத்தில் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒன்றே! இவ்வாறு பிரிவினையில்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலுங்கூட இத்தகைய பேதம் உண்டென்பதை யாரும் மறுக்க முடியாது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரிவினையில்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுக விடுவதற்கு ஒப்பானதாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடலநலத்தைக் கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே பொதுநோக்கு டைய அறிஞர் கடமையாகும்" என்று கூறினார்.
திருநெல்வேலி, சேரன்மாதேவியில் 'குரு குலம்' என்ற பெயரில் வ.வே.சுப்பிரமணிய அய்யர் பொதுமக்களிடமிருந்தும், காங்கிரஸி லிருந்தும் பணம் பெற்று நடத்திய பள்ளியில் பார்ப்பனர்களுக்கு தனி உணவு, பிரார்த்த னைக்கு வேறு இடம், பார்ப்பனர் அல்லாதவர் களுக்கு உணவு, பிரார்த்தனைக்கு வேறு இடம், என நடத்தினார், இதை எதிர்த்தார் தந்தை பெரியார். திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு போன்றவர்களும் இணைந்து குரு குலத்தை எதிர்த்தனர். நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. காந்தியார் தலையிட்ட பிறகும் வ.வே.சு அய்யர் உடன்படவில்லை. பெரியார், திரு.வி.க, டாக்டர் போன்றவர்களது பிரச்சாரத்தால் குருகுலத்திற்கு கொடுக்கப் பட்டுவந்த நன்கொடைகள் நின்றன. வர்ணாஸ்ரம குருகுலம் ஒழிந்தது.
இந்த காலத்தில் திருச்சியில் நடந்த காங் கிரஸ் கமிட்டி கூட்டத்தில் 'பார்ப்பனர்களுக்கு எதிராக பேசிவருகிறார்' என டாக்டர்.நாயுடு மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்துப் பேசி தோற்கடித்தார். அந்த கூட்டத்திலேயே சி.இராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ். ராஜன், என்.எஸ்.வரதாச்சாரியார், கே.சந்தா னம், டாக்டர்.சாமிநாத சாஸ்திரி ஆகியவர்கள் பதவி விலகி வெளியேறினார்கள்.
1920இல் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை காரியக் கமிட்டியில் 6 வாக்குகள் அதிகம் பெற்று நிறைவேற்றினார் தந்தை பெரியார். மாநாட்டின் தலைவராக இருந்த எஸ்.சீனிவாசய்யங்கார் 'இது பொதுநலத்திற்கு கேடு' என அனுமதி மறுத்தார். 1921இல் தஞ்சாவூரில் நடந்த மாகாண காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தார் தந்தை பெரியார். அதற்கு இராசகோபாலாச்சாரியார் 'கொள்கையாக வைத்துக்கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம்' என எதிர்த் தார். திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் மீண்டும் அதே தீர்மானத்தை கொண்டு வந்தார் தந்தை பெரியார். மீண்டும் பார்ப்பனவாதிகள் எதிர்க் கவே 'இராமாயணத்தையும், மகாபாரத்தை யும் நெருப்பில் கொளுத்த வேண்டும்' என்றார் தந்தை பெரியார். கலவரம் ஏற்படவே திரு. விஜயராகவாச்சாரியார் அடங்கினார். 1923இல் சேலம் மாகாண மாநாட்டில் மீண்டும் தீர்மா னத்தை கொண்டு வந்தார் தந்தை பெரியார். கலகம் ஏற்படும் சூழ்நிலை வரவே, டாக்டர்.வரதராஜலு நாயுடுவும், ஜார்ஜ் ஜோசப்பும் நிறுத்தினார்கள். 1924இல் பெரியார் தலை மையில் திருவண்ணாமலையில் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை கொண்டு வந்தார் தந்தை பெரியார். வகுப்பு வாரி தீர்மானத்தை தோற்கடிக்க சென்னையிலிருந்து அதிகமான ஆள்களை எஸ்.சீனி வாசய்யங்கார் கூட்டி வந்து தீர்மானத்தை தடுத்தார். தீர்மானம் நின்றுபோனது. 1925இல் காஞ்சி மாநாட்டில் தீர்மானம் தலைவரால் (திரு.வி.க.வால்) அனுமதிக்கப்படவில்லை. அப்போது தான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தான் பெற்ற கொள் கையை நடைமுறைப்படுத்துவதில் முரண் பாடு கொண்ட அமைப்பை விட்டு, ஆதிக்க வாதிகளால் நிறைந்த காங்கிரஸ் இயக்கத்தை விட்டு ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமைக்காகவும் வெளியேறினார்.
குறிப்பு: அதே காங்கிரஸ் சமூக நீதியில் அக்கறை செலுத்தி செயல்படுத்த முன்வந் திருப்பது நல்ல திருப்பமும், வரவேற்கத் தகுந்ததுமாகும்.
அதே நேரத்தில் பிஜேபி சமூகநீதிக்கு எதிரான கொள்கையோடு அனைத்து செயல் களிலும் நடந்து வருவது முக்கியமாகக் கவனிக் கத் தக்கதாகும்.
No comments:
Post a Comment