கடுமையான எதிர்ப்புக்கு இடையே மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு
ஆளுநரிடம் பட்டம் வாங்க 15 பேர் மறுப்பு
மதுரை, நவ.3 மதுரையில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்திய 220 பேர் கைது செய்யப் பட்டனர்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு நேற்று (2.11.2023) வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி மறுத்ததால் காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய் தனர். நீட் தேர்வு விலக்கு உள் ளிட்ட மசோதாக்களில் கையெ ழுத்திட மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட் டம் வழங்கும் கோப்பில் கையெ ழுத்திட மறுக்கும் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, நேற்று (2.11.2023) காம ராசர் பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில், மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை யில் நான்கு வழிச் சாலை அருகே ஆர்ணீப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ரா.விஜய ராஜன், எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பாலா உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதுரை புறநகர் - மாநகர் பகுதியி லிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சிக் கொடிகளு டனும், கருப்புக் கொடிகளுடனும் காலை 7.30 மணிக்கே திரண்டனர். மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந் தனர். காலை 9 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதி ராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கருப்புப் பலூன் களை வானில் பறக்கவிட்டதை காவல்துறையினர் உடைத்தனர். மாதர் சங்க பெண்கள் கருப்பு உடை அணிந்தும் வந்திருந்தனர். கருப்புக் கொடி காட்டியதால் தடுக்க முயன்ற காவல்துறையின ருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக் கும் இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து நாகமலை புதுக்கோட்டை என். ஜி.ஓ கால னியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பட்டம் வாங்க மறுப்பு
மதுரை எம்.பி. வெங்கடேசன் "பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டங்களை பெற மறுத்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட் டுள்ளார்.
No comments:
Post a Comment