ராமேசுவரம், நவ.9 - ராமேசுவரத் தில் இருந்து கடந்த வாரம் கட லுக்கு சென்ற மீனவர்கள் 64 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை ஊர் காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்ட மீனவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட 26 பேர் இன்று 3-ஆவது முறையாக ஊர் காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர்.
இதில் 22 மீனவர்களுக்கு வரு கிற 15-ஆம் தேதி வரை காவல் நீட் டிப்பு செய்து நீதிபதி உத்தர விட்டார். 4 மீனவர்களை மட்டும் நீதிபதி விடுதலை செய்தார். அப் போது மீண்டும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய் யப்படுவதாக நீதிபதி தனது உத்தர வில் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீன வர்கள் 4 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சில நாட் களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment