போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.11 கோடி அபராதம் போக்குவரத்துத் துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.11 கோடி அபராதம் போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை, நவ. 27- தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய் வாளர்கள் 25.11.2023 அன்று திடீர் களச் சோதனையில் ஈடு பட்டனர். இதில், பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டுள் ளன.

அதாவது பிரேக் லைட் எரி யாத வாகனங்கள், அதிக அள வில் ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், அதிக அளவு சரக்கு ஏற்றிச் சென்ற வாகனங் கள், உரிமங்களை தவறாக பயன் படுத்தியது, உரிமங்களின் விதி மீறலுக்கு மாறாக செயல்பட்டது, உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, வரி கட்டாமல் ஓடும் வாகனங்கள், காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று புத்தகங்கள் இன்றி வாகனம் ஓட்டியது என பல் வேறு குற்றங்கள் கண்டறியப் பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முழு வதும் 11 ஆயிரத்து 23 வாக னங்கள் சோதனைக்கு உட்படுத் தப்பட்டன. அதில், 2 ஆயிரத்து 281 வாகனங்கள் மீது நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது.

ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 315 அளவிற்கு செலுத்தப்படாத வரிகள் கண்டறியப்பட்டு வசூ லிக்கப்பட்டுள்ளன.

மேலும், விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் செலுத்தப் படாத வரிகள் மற்றும் அபராதத் தொகையை சேர்த்து ரூ.2 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரத்து 715 வசூலிக்கப்பட்டுள் ளது. அதிகபாரம் ஏற்றி வந்த தாக 389 வாகனங்களும், அதிக அளவில் ஆட்களை ஏற்றி வந்த தாக 251 வாகனங்களும், உரிமம் இல்லாமல் வந்த 96 வாகனங் களும், வரி கட்டாமல் இயக்கப் பட்டதாக 135 வாகனங்களும், தகுதிச் சான்றிதழ் (எப்.சி.) இல் லாத 308 வாகனங்களும், உரிய காப்பீடு இல்லாத 312 வாகனங் களும், ஓட்டுநர் உரிமம் இல்லாத 295 வாகனங்களும், புகைச் சான்று இல்லாத 111 வாகனங் களும், பிரேக் லைட் எரியாத 267 வாகனங்களும் கண்டறியப் பட்டன.

அவற்றில் 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திடீர் சோதனை கள் மாநிலம் முழுவதும் அவ்வப் போது நடத்தப்படும்.  மேற் கண்ட தகவல்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணை யர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment