உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, நவ.18- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப் படையில், அப்போதைய மாவட்ட ஆட் சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 இல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆர் வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இது தொடர் பாக தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (17.11.2023) விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வி.வெங்க டேஷ், தென் மண்டல அய்ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட் டுள்ளது. அதாவது, அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையைச் சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக சிபிஅய் பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல் துறை அதிகாரிமீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா என கேள்வி எழுப் பினர். இது தொடர்பாக சிபிஅய் தரப்பு வழக்குரைஞர், தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அடுத்த விசாரணையின்போது ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், குற்றச் சாட்டுக்குள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டார்களா என்பது தெரிய வில்லை. அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள காவல் துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ், ஏற்கெனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர்கள் பிரச்சினை ஏற்பட்டபோது, அதனை திறமையாக கையாண்டு நீதிமன்றம் சுமுகமாக செயல்பட செய்தவர். அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானார் என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி கள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment