மாவட்ட தலைவர் தண்ட பாணி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் மணி வேல் கடவுள் மறுப்பு கூறினார். கழக பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், கழக மாவட்ட செயலாளர் எழிலேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டிசம்பர் 2 தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்தும் அதை முன்னிட்டு விடுதலை சொந்தங்கள் சேர்த்து வழங்குவது பற்றியும் நவம் பர் 26 ஜாதி ஒழிப்பு போராட்ட ஈகியர் நாள் பொதுக்கூட்டம் நடத் துவது குறித்தும் விவாதிக்கப்பட் டது.
மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் டிஜிட்டல் ராமநாதன், பகுத் தறிவாளர் கழக மாவட்ட பொறுப் பாளர் பெரியார் செல்வம், வேகா கொள்ளை கிளை கழகத் தலைவர் வேணுகோபால், மாவட்ட இணை செயலாளர் பஞ்சமூர்த்தி, வடலூர் கழக செயலாளர் குணசேகரன், கழக அமைப்பாளர் முருகன், இந் திரா நகர் கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் ஆகியோர் கருத் துரை ஆற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று மாவட்ட கழக சார்பில் 200 விடுதலை சந்தாக்களை மாவட்ட கழக சார்பில் வழங்குவது என்றும்,
தமிழர் தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங் குவது பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்குவது என் றும்
நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு போராட்ட ஈகியர் நாள் பொதுக் கூட்டம் ஆர்ச்கேட் அருகில் நடத் துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் இந்திரா நகர் கிளைக் கழக செயலாளர் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment