டிசம்பர் 2: சுயமரியாதை நாள் விழா தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் 150 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 26, 2023

டிசம்பர் 2: சுயமரியாதை நாள் விழா தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் 150 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என முடிவு

தருமபுரி, நவ. 26- தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22-.11.-2023ஆம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் கு.சரவ ணன் தலைமையில் நடைபெற்றது.                                         

மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ் வரவேற்புரை யாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்டத் துணை செயலாளர் இ,மாதன். நகர தலைவர் கரு. பாலன், ஆகியோர் முன்னிலை ஏற்ற னர். மாநில மகளிர் அணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறை செயலா ளர் மாரி. கருணாநிதி, மாநில இளைஞரணி துணை செயலா ளர் மா. செல்லதுரை ஆகி யோர்  கருத்துரையாற்றினர்.                   

இறுதியாக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன் பங்கேற்ற அனைவருக் கும்  விடுதலை சந்தா புத்தகங் களை வழங்கி சிறப்புரையாற் றினார். பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி இணைப் புரை  வழங்கினார்.            

தீர்மானம்                                                      

கலந்துரையாடல் கூட்டத் தில் எடுக்கப்பட்ட தீர்மானங் கள்: தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி  பெரியார் பெருந்தொண் டரும், பொதுக்குழு உறுப்பின ருமான புலவர் இரா.வேட்ட ராயன், மற்றும் பொதுவு டைமை இயக்கத்தின் முன் னோடியும் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலை வருமான  102 வயதுடைய  தோழர் சங்க ரய்யா, கழக மாநில மகளிணி மேனாள் செயலாளர் கழக வீராங்கனை க.பார்வதி அம் மையார் ஆகியோரின் மறை விற்கு மாவட்ட திராவிட கழ கம் வீர வணக்கத்தை செலுத்து கிறது.                                                                                             

டிசம்பர் 2 ஆம்  தேதி தமிழ் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாளை  திராவிடர்களின் எழுச்சி நாளாகக் கொண்டாடு வதுடன் அதன் அடையாள மாக 100 விடுதலை சந்தாக்களை வழங்குவதோடு அதன் இலக் காக 150 விடுதலை சந்தாக்களை வசூலித்து தருவது எனவும், ஆசிரியர் பிறந்த நாளை முன் னிட்டு பொதுக்கூட்டம் மற் றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என வும் முடிவு செய்யப்படுகிறது.                                        

கலந்து கொண்டோர்.                       

கலந்துரையாடல் கூட்டத் தில் ஒன்றிய கழக தலைவர் மா.சென்றாயன், நகர இளைஞ ரணி அமைப்பாளர் மு.அர்ஜு னன்,  தொழிலாளர் அணி அமைப்பாளர் பெ. மாணிக்கம், பகுத்தறிவு ஆசிரியர் அணி  பொறுப்பாளர் நா. அண்ணா துரை, பாப்பாரப்பட்டி நகரத் தலைவர்  சுந்தரம், மாணவர் கழகப் பொறுப்பாளர் ச. கி. வீர மணி,  அரூர் மாவட்ட இளை ஞர் அணி தலைவர் த. மு. யாழ் திலீபன், சீவாடி சங்கர்,  மணி மற் றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment