வா.மு.சே.வின் இணையர் சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் தொண்டறத்தாருக்கு பொற்கிழி வழங்கி கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

வா.மு.சே.வின் இணையர் சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் தொண்டறத்தாருக்கு பொற்கிழி வழங்கி கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரை

சென்னை, நவ.12 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 11.11.2023 அன்று மாலை 6 மணிய ளவில் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர் வா.மு.சே. திருவள்ளுவர் அனைவரையும் வரவேற்று மன்ற செயல்பாடுகள் குறித்துப் பேசினார். கந்தசாமி நாயுடுகல்லூரி முதல்வர் வா.மு.சே. ஆண்டவர் அறிமுக உரையாற்றினார்.

வேல்சு பல்கலைக் கழக மொழிகள் புல முதல்வர் பேராசிரியர் ப. மகாலிங்கம்  தலைமை வகிக்க, உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பாசிரியர் இஜே. சுந்தர் முன்னிலை வகித்தார்.

கவிஞர் கண்மதியன், ஈரோடு கவிஞர் இளையகோபால், புலவர் சோ. கருப்பசாமி வாழ்த்துக் கவிதை வழங்கினர்.

தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பொற் கிழி வழங்கிட வருகை தந்திருந்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்குப் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் பொன்னாடை அணிவித்தார். பங்கேற்ற அனைத்துப் பெரு மக்களும் அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொன்னாடை அணிவித்து சிறப் பிக்கப்பட்டனர்.

பாராட்டப் பெற்ற சான்றோர்

உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தி.க. சிவக் குமார் தவத்திரு சாயி. இரவிச்சந்திரன், ஈரோடு கவிஞர் இளையகோபால், மாட்சியர் இரா. மோகனசுந்தரம், திருக்குறள் தொண்டர் வை.மா. குமார், பெருங்கவிஞர்கள் முகம் இளமாறன்,  எழில்வேந்தன், முருகையன், மாட்சியர் வேலன் தளபதி, முனைவர் சப்ராபீவி அல் அமீன், படத்துறைப் பாவலர் நல்ல அறிவழகன், பாவாணர் கோட்டத் தலைவர் இளங்கண்ணன், நகைச்சுவை நாவரசு குடியாத்தம் குமணன், ஆய்வறிஞர் பூபாலன், மாட்சியர் பாலமீரா, தோழர் அ.சி. சின்னப்பத் தமிழர் ஆகியோருக்கு அன்னை சேது அறக்கட்டளை சார்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பட்டயம், பொற்கிழி வழங்கி, பொன்னாடைஅணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார். 

கவிஞர் சிறப்புரையில்...

சிறப்புரையாற்றிய கவிஞர் கலி. பூங் குன்றன் குறிப்பிட்டதாவது:

பெருங்கவிக்கோ வா.மு.சே. அவர்கள் நாற்பதாண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் இறையன் மூலம் எனக்கு அறிமுகமானவர். இறை நம்பிக்கை உள்ளவர் என்றாலும் அதனைவிட தந்தை பெரியார்மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.

நடைப் பயணம் என்றாலே பொய்மை கலந்து நகைப்பிடமாகியுள்ள நிலையில், உண்மையான நடைப் பயணம் சென்று தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பணிபுரிந்தவர். அவரது வாழ்விணையருக்கு விழா எடுத்து நன்றி காட்டுவது பாராட்டுக்குரியது. இது அனை வரும் பின்பற்றி நடக்கத்தக்க ஒன்றாகும். ஆன்மீகத்தில் இருந்தாலும் பகுத்தறிவு அவரிடம் சிறப்பாக உள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தினரும், பாராட்டுப் பெற்ற விருதாளர்களும் ஒருங் கிணைந்து தமிழ்த் தொண்டு செய்வது பாராட்டுக்குரியது. நமக்குள்ளே மாறுபாடுகள் ஏற்பட்டாலும்கூட தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவ்வப்போது கூறுவது போன்று "எது நம்மை இணைக் கின்றதோ அதனை முன்னிறுத்தி - எது நம்மைப் பிரிக்கின்றதோ அதனை அலட்சி யப்படுத்தி பணி செய்வது"தான் சிறந்த ஒன்று.

தமிழர் தலைவர் அவர்கள் இந்நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு விருதாளர்களைப் பாராட்டும் நிலையில் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பார். அந்தப் பணியை எனக்கு வழங்கியமைக்கு எனது நன்றியைத் தெரி வித்து பாராட்டுக்குரிய தமிழச் சான் றோர் களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகின்றேன்.

வா.மு.சே. அவர்கள் சிறப்புடன் வாழ்வ தற்கு அவரது தொண்டுள்ளமே காரணம். அவரது வாழ்க்கைப் பயணம் நீள வேண்டும். அதன் பயனை தமிழ் மக்கள் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர்  குறிப்பிட்டார்.

பட்டயம் பெற்று பாராட்டப் பெற்றோர் சார்பில் இளங்கண்ணன் உரையாற்றினார். பெருங்கவிக்கோ  வா.மு.சே. ஏற்புரையாற் றினார்.

இந்நிகழ்வில் மாநில ப.க. தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், தலைமைக் கழக அமைப் பாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா. தாமோ தரன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், அமைப்பாளர் சி. பாசுகர், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் க. தமிழ்ச்செல்வன், கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, மு.பெ. பெரியார் மாணாக்கன், ப. சேரலாதன், மு. இரா. மாணிக்கம், மா. இராசு, அயன்புரம் துரைராசு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக முனைவர் சோ. கருப்பசாமி  நன்றி கூறினார்.

No comments:

Post a Comment