அரசமைப்புச் சட்டம் பிரிவு 340இன்படி அமைக்கப்பட்ட பி.பி.மண் டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஒன்றிய அரசின் நேரடி நியமனம் மற்றும் கல்வி நிலையங்கள், பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் துறைகளில் இதர பிற்படுத்தப்பட் டோர்க்கு (ஓபிசி பிரிவினர்க்கு) 27 சத விகித இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்து 31.12.1980இல் ஒன்றிய அரசிடம் அறிக் கையை அளித்தது.
பிரதமர் வி.பி.சிங் தலைமையி லான தேசிய முன்னணி அரசு, ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களின் நேரடி நியமனங்களில் ஓபிசி பிரிவினர்க்கு 27 சதவீதம் அளித்திடும் அரசாணையை 13.8.1990 அன்று வெளி யிட்டது.
பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசு, முன்னர் வி.பி. சிங் பிறப்பித்த ஆணையை மாறுதல் செய்து 25.9.1991 அன்று அரசாணை வெளியிட்டது. அந்த ஆணையில், ஓபிசி பிரிவினரில் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும், மேலும், இட ஒதுக்கீடு திட்டத்தில் இது வரை பங்கேற்காத ஜாதியினர்க்கு, அதாவது, உயர்ஜாதியினரில் ஏழைக ளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தும் ஆணை பிறப்பித்தது. தற்போது மோடி அரசு நிறைவேற்றிய உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கு 10 இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு முன்னோடி ஆணை.
மேற்குறிப்பிட்ட இரண்டு அரசா ணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு (இந்திரா சகானி வழக்கு அல்லது மண்டல் இட ஒதுக்கீடு வழக்கு), உச்சநீதிமன்றம் தடையும் விதித்தது. விரிவான விவா தத்திற்குப் பிறகு, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பெரும்பான்மை நீதிபதிகள் கொண்ட தீர்ப்பினை (6-3) 16.11.1992 அன்று வழங்கியது. தீர்ப்பின் சாரம்:
1. ஓ.பி.சி. பிரிவினர்க்கு ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு அளித்திட வி.பி.சிங் அரசு 13.8.1990 அன்று பிறப்பித்த ஆணையை நீதிமன்றம் உறுதி செய் தது.
2. உயர் ஜாதியில் ஏழைகளுக்கு 10 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து நரசிம் மராவ் அரசு 25.9.1991 அன்று பிறப்பித்த ஆணையை அரசமைப்புச் சட்டத் திற்கு எதிரானது என தீர்ப்பளித்து ஆணையை ரத்து செய்தது.
3. ஓபிசி பிரிவினரில் முன்னேறிய பிரிவினர் விலக்கி ஏனைய பிற்படுத் தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
4. பதவி உயர்வில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது.
5. இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 30 ஆண்டுகள் கழிந்த பின்னரும், தற் போது ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் ஓபிசி பிரிவினரின் பிரதி நிதித்துவம் முற்றிலும் கவலையளிப்ப தாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் இருக் கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஓபிசி பிரிவினர் முழு ஒதுக்கீட்டையும் அடைவது எப்போதும் சாத்தியமில்லை என்பதையும், இடஒதுக்கீடு கொள்கை என்றைக்கும் காகிதத்தில் மட்டுமே இருக்கும் வகையில் அமைந்து விட்டது.
உயர்ஜாதியினரில் அரிய வகை ஏழைகளுக்கு ஒன்றிய அரசு 10 சத விகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தும் நிலையில், அதற்கு நீதி மன்றம் எந்த தடையாணையும் பிறப் பிக்கவில்லை. மாறாக பச்சைக் கொடி காட்டி விட்டது. ஆகவே, இட ஒதுக்கீட் டில் 50 சதவிகித உச்ச வரம்பு என்ப தற்கு எந்த அர்த்தமும் கிடையாது.
ஆகையால், மண்டல் குழு பரிந்து ரைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் ஓபிசி பிரிவினர்க்கு 52 சதவீத இடஒதுக்கீடு, பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் பிரிவில் இட ஒதுக்கீடு, கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக ஒழித்தல், மற்றும் இட ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்ற தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இன் றைய நாளில் உறுதி கொள்வோம்.
- கோ.கருணாநிதி
No comments:
Post a Comment