12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படிக்காதவர்களும் மருத்துவம் பயிலலாமாம் மருத்துவ ஆணையம் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படிக்காதவர்களும் மருத்துவம் பயிலலாமாம் மருத்துவ ஆணையம் அறிக்கை

புதுடில்லி, நவ. 25- 12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் மற்றும் உயி ரியல் படித்தவர்கள் மட் டுமே எம்பிபிஎஸ் படிக்க முடியும் என்ற நிலையில் தற்போது உயிரியல் படிக்காதவர்களும் மருத் துவர்கள் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிப் பில், அறிவியல் குரூப்பில் உயிரியல் பாடம் எடுக் காமல் இயற்பியல், வேதி யியல் மற்றும் கணிதம் பாடங்கள் படித்தவர்கள் மருத்துவம் படிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத் தில் உயிரியல் அல்லது உயிரி தொழில் நுட்பங்க ளுக்கான பிளஸ் டூ தேர்வை அங்கீகரிக்கப் பட்ட கல்வி வாரியத்தில் தனியாக எழுதி வெற்றி பெற வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு  சேர்வதற்கான விண்ணப் பத்தை அளித்து நீட் தேர்வு எழுதி  மருத்துவம் பயிலலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது 

இந்த புதிய உத்தரவு மூலம் 12ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படிக்காதவர்கள் தனியாக உயிரியல் படித்து மெடிக்கல் கல் லூரியில் சேரலாம் என் பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதிய அறிவிப் பின் படி பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்கள் எடுத்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் படிக்க  தனி யாக உயிரியல் பாடம் மட்டுமே படித்து பின் னர் நீட் எழுதி மருத்து வக்கல்லூரியில் சேரலாம் என்ற புதிய விதியை அறி முகப்படுத்தி உள்ளது. இதன் படி இனி உயிரியல் பாடங்களையும் நீட் கோச் சிங் மய்யங்கள் பணம் பிடுங்க புதிய வழியை ஒன்றிய அரசு திறந்துவிட்டுள்ளது.

No comments:

Post a Comment