பெரியார் விடுக்கும் வினா! (1156) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1156)

கடவுளைப் பற்றி என்ன இலக்கணம், இலட்சியம் சொல்லப்படுகிறது? உருவமற்ற, குணமற்ற, நிறமற்ற, எண்ண முடியாத தன்மை படைத்த, பிறப்பு, இறப்பற்ற, எக்காலத்தும், எங்கும் நிறைந்து நிற்கும் சக்தி என்பதாகச் சொல்லப்படுகின்றதா? இல்லையா? அப்படிப் பார்த்தால் இந்த இராமன் எப்படிக் கடவுளாக முடியும்? கிருஷ்ணன், கந்தன், விநாயகன் இப்படியாகச் சொல்லப் படுபவைகள் எல்லாம் எப்படிக் கடவுள்களாக முடியும்? இவைகள் எல்லாம் பிறந்திருக்கின்றன, செத்திருக்கின்றன உருவ மும் இருக்கின்றன - இவ்வாறு சராசரி குணம் படைத் தவைகளாய் இருப்பவைகளை எப்படிக் கடவுள் களாக ஒத்துக் கொள்ள முடியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment