11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கி யுள்ளது. அதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டு கடலோர மாவட்டங் களிலும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக தென்காசியில் 90மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது.   அதேபோல தெற்கு வங்கக் கடல் பகுதியலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 6ஆம் தேதி வரை இதேநிலை நீடிக்கும்.  


No comments:

Post a Comment