மணல் விற்பனை குறித்து 10 மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

மணல் விற்பனை குறித்து 10 மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பாணை

அமலாக்கத்துறை போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை, நவ.25  சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக் கத் துறை அனுப்பிய அழைப்பாணை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நவ.27-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடு தலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகள், சேமிப்புக் கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்.12ஆ-ம் தேதி தீவிர சோதனை நடத்தினர். இதில், மணல் குவாரிகளின் மொத்த முகவராக செயல் பட்டு வந்த புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதி காரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி பணம்,ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 

இதையடுத்து, 10 மாவட்ட ஆட்சி யர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறி யாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப் பணித் துறை பொறியாளர் திலகம் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நீர் வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், 10 மாவட்ட ஆட்சியர் களுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை, நீர்வளத் துறை செயலர்கள், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனிம வள கொள்ளை தொடர்பாக ஆயிரக் கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு சென்று நடவடிக்கை எடுக்காத அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாக கூறி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி,  வரம்பு மீறி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

உள்நோக்கம் கொண்டது: உள்நோக் கத்துடன், மாநில நிர்வாகத்தை சீர்குலைக் கும் விதமாக ஒன்றிய அரசின் கைப் பாவையாக அமலாக்கத் துறை செயல் படுகிறது. குறிப்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட் சியர்களுக்கு அழைப்பாணை அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசோ, புலன்விசாரணை அமைப் புகளோ, நீதிமன்றமோ உத்தரவிட்டு இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறை யால் நடவடிக்கை எடுக்க இயலும். சட்ட விரோத மணல் குவாரிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசே விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. கூட்டாட்சி தத்துவத் துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை அழைப்பாணை பிறப்பித்துள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அமலாக்கத் துறையை பயன்படுத்தி இதுபோன்ற சர்வாதிகார நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட குவாரி களின் விவரம் மட்டுமின்றி, தற்போது அனைத்து மணல்குவாரிகளின் விவரங் களையும் அமலாக்கத் துறை கோரியுள்ளது. சட்டவிரோத மணல் விற்பனை தொடர் பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படாத மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அழைப்பாணை பிறப்பிக்க இயலாது. மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சி யர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப் பாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண் டும் என்று, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண் முகசுந்தரம் நேற்று (24.11.2023) முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நவ.27ஆ-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment