தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் 10 இடங்களில் அகழாய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் 10 இடங்களில் அகழாய்வு

சென்னை,நவ.12 - தமிழ்நாட்டில் அடுத்தாண்டு 10 இடங்களில் அக ழாய்வு செய்ய, தமிழ்நாடு தொல் லியல் துறை முடிவு செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட் டறை பெரும்புதூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தர் மபுரி மாவட்டம் பூதிநத்தம், அரிய லூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், புதுக்கோட்டை மாவட் டம் பொற்பனைக் கோட்டை, சிவ கங்கை மாவட்டம் கீழடி, திருநெல் வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை ஆகிய எட்டு இடங்க ளில், தமிழ்நாடு தொல்லியல் துறையால், இந்தாண்டு அகழாய்வு செய்யப்பட்டது.

கடந்த மாதம் முடிந்த இந்த அகழாய்வுகளில் கிடைத்த தொல் பொருட்களை ஆவணப்படுத்தி, முதல் நிலை அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணியில், அகழாய்வு இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, வரும் ஜனவரி முதல், 10 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வுகளை துவங்க, தமிழ் நாடு தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் இந்தாண்டு எட்டு இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது. அவற்றில், கங்கை கொண்ட சோழபுரம், கீழடி, பொற் பனைக்கோட்டையில் அடுத் தாண் டும் அகழாய்வை தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேநேரம், பட்டறை பெரும்பு தூர், பூதிநத்தம், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங் களுக்கு பதில், அருகில் உள்ள வாழ் விடங்களை தேடும் பணி துவங்கி உள்ளது. அவற்றில் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றுக்கான கள ஆய்வு செய்து, அகழாய்வு இடங்களை உறுதி செய்ய உள்ளோம். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அடுத் தாண்டு, 10 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இடங் களை அடையாளப்படுத்திய பின், மத்திய தொல்லியல் துறை யிடம் அனுமதி கோர உள்ளோம்.

தமிழ்நாட்டில் சங்க கால சோழர் களின் துறைமுகமான காவிரிப்பூம் பட்டினம் எனும் பூம்புகாரிலும், பாண்டியர்களின் துறைமுகமான கொற்கையிலும், அகழாய்வு செய் யும் திட்டம் உள்ளது.

பூம்புகாரை பொறுத்தவரை, பழைய நகரமும், துறைமுகமும் கடலுக்குள் மூழ்கி விட்டன.

அந்த கடல் பகுதி, ஆழமும், அலையும், அடர்த்தியும் அதிகம் உள்ள பகுதி. அதனால், அந்த பகு தியில் கடலாய்வுக்கான அனுமதி பெறுவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

கொற்கையைப் பொறுத்தவரை, கடலுக்குள் இருந்த நிலப்பகுதி வெளியில் வந்து விட்டது.

மேலும் அந்த பகுதி அடர்த் தியும் ஆழமும் குறைந்த பகுதியாக உள்ளதால், அங்கு இந்தாண்டு ஆழ்கடல் ஆய்வு செய்யும் திட்டம் உள்ளது.

அதற்கு, மத்திய கடலாய்வு நிறுவனம், கடற்படை உள்ளிட்ட வற்றின் அனுமதியையும், மத்திய தொல்லியல் துறையின் அனுமதி யையும் கோர உள்ளோம்.

-இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment