தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்: அரசு திட்டம்
கடலூர், நவ. 17- முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (‘கலைஞர் 100”) விழாவை முன்னிட்டு 2023--2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.11.2023 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின்காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, அய்.டி.அய், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலி யர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துக்கொண்டு பயன்பெறலாம். இச்சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142--290039), 9499055908, 9499055907 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 25.11.2023 (சனிக்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment