9 ஆண்டுகள் பி.ஜே.பி. ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களோ 141 பேர்!
ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
9 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 141. இதில் பி.ஜே.பி.யினர் ஒருவர்கூட இல்லை. அதேநேரத்தில் 10 ஆண்டுகால டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க் களின் எண்ணிக்கை வெறும் 45. இதில் காங்கிரசை சேர்ந்த எம்.பி.,க்கள் 25 பேர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்களின் எண்ணிக்கை யையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை தோற்கடிக்க வரும் தேர்தலில் மக்கள் முன்வர வேண்டியது அவசியம்; இதைத் தவிர வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சூரத்திலிருந்து சஞ்சய் ஈழ வா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின்கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அவருக்குக் கிடைத்த பதில்மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் உலகின் ஜனநாயகவாதிகள் அனை வரையுமே அதிர்ச்சியூட்டுபவையாக அமைந் துள்ளன!
9 ஆண்டுகளில் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் 141 பேர்
2014 முதல் நேற்று (3.11.2023)வரை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை- 9 ஆண்டுகளில் 141 பேர்!
அத்துணைப் பேரும் எதிர்க்கட்சிகளின் உறுப் பினர்களே!
இதில், ஆளுங்கட்சியிலிருந்து ஒருவர்கூட கிடை யாது என்பதும், அது அதைவிட அதிசயமானதும்கூட! (353 ஆளுங்கட்சி (பி.ஜே.பி.) உறுப்பினர்கள் - இரு அவைகளிலும்).
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை எப்படி ‘‘மதிக்கிறது'' என்பதற்கு இதைவிட நல்ல நடைமுறை விளக்கம் - எடுத்துக்காட்டு வேறு தேவையா?
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அத்துணைப் பேரும் அவ்வளவு கட்டுப்பாட்டுடன் அவையின் மாண்புக்குரிய முறையிலேயே நடந்துகொண்டதால்தான் அவர்களில் எவரும் இடைநீக்கமே செய்யப்படவில்லை என்று அறு தியிட்டு, உறுதிப்பட பா.ஜ.க. பதில் அளிக்க முடியுமா?
நாடாளுமன்றக் கூட்டத்திலேயே இஸ்லாமிய உறுப்பினரை வசை பாடிய பி.ஜே.பி. உறுப்பினர்
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற குறு கிய கால நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சியைச் சார்ந்த ஓர் (இஸ்லாமிய) உறுப்பினரை எவ்வளவு வசை மொழிகளில் தரம் தாழ்ந்து பா.ஜ.க. உறுப்பினர் பேசி, அவையின் நாகரிகத்தையே தலைகவிழச் செய்தார் என்பதை நாடும், மக்களும் மறந்திருக்கமாட்டார்கள்.
அவர்மீது எந்தவிதமான நடவடிக்கையும் பாயவே இல்லையே!. அவர் 5 மாநிலத் தேர்தல் மேற்பார்வை யாளராக - ஒரு மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையால் நிய மிக்கப்பட்டு, அவர் முதுகைத் தட்டிக் கொடுத்துள்ளனர் - பரிசு வழங்கியல்லவா உள்ளது!
நாடாளுமன்றத்திலேயே கோட்சேவைப்
புகழ்ந்து பேசிய பி.ஜே.பி. உறுப்பினர்
மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி யான பிரக்யாசிங் தாகூர் என்பவர் ஜாமீனில் வந்து, பா.ஜ.க. எம்.பி.,யாக தேர்வு பெற்றவர். காந்தியைக் கொன்ற கோட்சேவை அவையில் புகழ்ந்து பேசியதை விட, அருவருப்பு நிறைந்த அவமதிப்பு வேறு உண்டா? கட்சித் தலைமை கண்டித்தது உண்டா?
இப்படி கடந்த 9 ஆண்டுகளில் எண்ணற்ற நிகழ்வு களைச் சுட்டிக் காட்ட முடியுமே!
மாநிலங்களவையில் 98 எதிர்க்கட்சியினர் உள்ளனர்.
மக்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 192 பேர்!
மொத்தம் 290 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள். இந்த எண்ணிக்கையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சுமார் 50 சதவிகிதம்- சரி பகுதியினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர்!
உலக நாடுகளின் - ஜனநாயகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு சார்பு நிகழ்வு எங்காவது நடந்திருக்குமா?
ஜனநாயகவாதிகள் கைகொட்டி நகைப்பர்!
10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் வெறும் 45 பேரே!
இதற்குமுன் 10 ஆண்டுகால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி - யு.பி.ஏ. ஆட்சியில் பிரதமராக மன்மோகன்சிங் (தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் பங்கேற்ற கூட்டணி ஆட்சி) 2001 ஆம் ஆண்டுமுதல் 2014 ஆம் ஆண்டு வரை மொத்தமே 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள்.
இதில் 25 எம்.பி.,க்கள் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.
அதுவும் மக்களவை - மாநிலங்களவை நடவடிக்கை களுக்கு எதிராக செயல்பட்ட எம்.பி.,க்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஜனநாயகம் காப்பாற்றப்பட ஒரே வழி வரும் தேர்தலில் பி.ஜே.பி.யைப் படுதோல்வி அடையச் செய்வதே!
பிரதமர் மோடி ஆட்சி - கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என 54 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் அதிகபட்சமாக நீக்கம் செய்யப் பட்டவர்கள்-
காங்கிரஸ் - 43, அ.தி.மு.க. - 34, தெலுங்குதேசம் - 14, ஆம் ஆத்மி - 1, மற்ற கட்சிகளில் ஒரே ஒரு எம்.பி.,
மாநிலங்களவையில் அதிகபட்சமாக நீக்கம் செய்யப் பட்டவர்கள் -
திரிணாமுல் காங்கிரஸ் - 14, காங்கிரஸ் - 11, ஆம் ஆத்மி - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5, தி.மு.க. - 5, பி.ஆர்.எஸ். - 3, இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.அய்) - 2, சிவசேனா (யுடிபி) - 2
தன்முனைப்புக்கு இடம் தரக்கூடாது!
இதற்கு ஒரே பதில், மீண்டும் ஜனநாயகம் காப்பாற்றப் பட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை வரும் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து, வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர, ஜனநாயகம், இந்திய அரசமைப்புச் சட்டம் பிழைக்க வேறு வழியே இல்லை.
வாக்காளர்களே, இதனை மனதிற்கொள்ளுங்கள்.
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் இதில் ஒற்றுமை யுடன் இருந்து ‘இந்தியா' (மிழிஞிமிகி) கூட்டணி வெற்றி வாகைசூட அனைத்து முயற்சிகளையும் - தன்முனைப் புக்கு இடம்தராது செய்யவேண்டியது அவசர அவசியமாகும்!
4.11.2023
No comments:
Post a Comment