நட்சத்திரங்கள் ஆய்வுக்கான செயற்கைக்கோள் டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

நட்சத்திரங்கள் ஆய்வுக்கான செயற்கைக்கோள் டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்

சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, சூரியக் குடும்பத்திற்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கோள்களை ரேடாரில் தேடும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இறங்க உள்ளது. இதற்காக 'எக்சோ வேர்ல்ட்ஸ்' என்ற செயற்கைகோளை உருவாக்கி வருகிறது. இது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் கோள்கள் அல்லது மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு பணியாகும். சுமார் 5 ஆயிரம் புறக்கோள்கள் (எக்சோபிளானெட்டுகள்) இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

பூமியை போன்ற வளிமண்டலம் இருப்பதால் நூற் றுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வாழக்கூடியதாக இருக்கலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது மாற்றம் அடைகின்றன. திட்ட மிடப்பட்ட புறக்கோள்கள் பணிக்கு இன்னும் ஒன்றிய அமைச்சர் அவையால் அங்கீகரிக்கப்படவில்லை. விண்வெளி ஆய்வு அத்தகைய விளக்குகளின் நிற மாலை பண்புகளை ஆய்வு செய்யும். அவை பூமியால் உருவாக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்துமா என்பதை கண்டறியும்.

புறக்கோள்களின் வளிமண்டல குணாதிசயங்களை தெரிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வுக் கருவிகள் அகச்சிவப்பு, ஒளியியல் மற்றும் புற ஊதா நிற மாலைகளில் கதிர்வீச்சை பகுப்பாய்வு செய்யும். இத்தகைய குணாதிசயங்கள் மூலம் அங்கு வாழக்கூடிய கோள்களின் வளிமண்டலம் எதனால் ஆனது என் பதை நமக்கு தெரியவரும். செவ்வாய் கோள் ஆய்வுக் கான லேண்டர் திட்டங்களும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

அதே நேரத்தில் வீனஸ் (சுக்கிரன்) பயணத்திற்கான ஒப்புதலுக்காக இஸ்ரோ ஈடுபட்டு வரும் வகையில், வீனஸ் பயணத்திற்கான 2 கருவிகள் தயாராகி வரு கின்றன. வீனஸ் மேற்பரப்புக்கு அருகில் பூமியை விட 100 மடங்கு வளிமண்டல அழுத்தத்தை கொண்டுள்ளது. ஆனால் வீனஸ் மேற்பரப்புக்கு அருகில் அதிக வளி மண்டல அழுத்தத்திற்கான காரணங்கள் தெரிய வில்லை. வீனசை சூழ்ந்திருக்கும் அடர்த்தியான மேகங்கள் அமிலத்தால் நிரம்பியுள்ளன, மேலும் ஒருவரால் மேற்பரப்பைக் கூட ஊடுருவ முடியாது.

வீனஸ் போன்ற கோள்களின் பரிணாம வளர்ச்சி யைப் புரிந்துகொள்வது அவசியமாகும். வீனஸ் மற்றும் செவ்வாய் கோள்களை ஆய்வு செய்தால், பூமியில் நம்முடைய செயல்பாடுகளினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய முடியும்.

இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில் இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்பு டைய முடிச்சுகளை புரிந்து கொள்வதற்கான ஆய் வுப்பணிக்காக இஸ்ரோ 'எக்ஸ்ரே போலரிமீட்டர்' அல்லது 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் டிசம்பரில் ஏவ இஸ்ரோ தயாராக உள்ளது.

450 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் பிரகாசமான எக்ஸ்ரே பல்சர்களின் துருவமுனைப்பை அளவிடுவதற்கும் பிரகாசமான கருத்துகள் மூலங் களின் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கும் 2 கருவிகளை கொண்டுள்ளது. தற்போது எக்ஸ்ரே மூலங்கள் ஆற்றல், நேரம் மற்றும் இருப்பிடம் ஆகிய வற்றை அளவிடுகின்றன' என்றனர்.

சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான செயற்கை கோளை டிசம்பர் மாதம் விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.

No comments:

Post a Comment